வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்பவே கண்ணை கட்டுது.. லிஸ்ட் ரொம்பவே பெருசா இருக்கே.. என்ன செய்ய போகிறார் ஜோ பிடன்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அடுத்த மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை, ஒரு வேளை ஜோ பிடன் தோற்கடித்தால், அவர் பல்வேறு புதிய சவாலை எதிர்கொள்வார்.

ஏனெனில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான நெருக்கடியை அமெரிக்கா சந்தித்துள்ளது. கொரோனாவாலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவை வழிநடத்த ஒரு புதிய நிர்வாகத்தை உருவாக்குவது நிச்சயம் பிடனுக்கு சவாலாக இருக்கும்.

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது, ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

ஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்!ஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்!

டிரம்ப் கருப்பொருள்

டிரம்ப் கருப்பொருள்

இந் தேர்தலில் பிரதான பிரச்சனையாக கொரோனா வைரஸ் தொற்று நோய் தான் இருக்கிறது. அதன்பிறகு வேலை வாய்ப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவையும் பேசப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின் மையக் கருப்பொருளாக பேசி வருகிறார்.

பிடன் சந்திக்க போகிறார்

பிடன் சந்திக்க போகிறார்

எனவே பிடன் அதிபரானால் பொது சுகாதார பேரழிவை சிறப்பாகக் கையாள முடியும் என்பதை காட்ட வேண்டும். அமெரிக்காவின் அரசின் நிர்வாக முடிவுகளில் டிரம்ப் செய்த சேதங்களையும், பொதுமக்களுக்கு டிரம்ப் அரசின் முடிவுகளை சீர்திருத்த வேண்டியது வரும். டிரம்ப் அரசு எடுத்த முடிவுகளால் பொதுமக்களுக்கு குறைந்த மன உறுதியை மீட்டெக்க கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். இதுதவிர ஜனநாயகக் கட்சியினர் சொல்வதையும் அவர் கேட்க வேண்டியதிருக்கும். பீடன் வெற்றி பெற்றாலும் தற்போதைய கடினமான சூழலால் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்வார்.

சொல்லியாக வேண்டும்

சொல்லியாக வேண்டும்

தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ளதால், பிடனுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் ட்ரம்பின் பலவீனங்கள், அவருடைய தவறுகளை அதிகம் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதேபோல் தேர்தலுக்கு பின் என்ன செய்ய போகிறார். எப்படி சேதங்களை சரிசெய்ய போகிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ஜனநாயக கட்சி உறுதி

ஜனநாயக கட்சி உறுதி

ஜனநாயக தேசியக் குழுவின் நிதித் தலைவரான கிறிஸ் கோர்ஜ், தேர்தலுக்கு பிந்தைய மாற்றம் குறித்து கூறும் போது, இது நவீன அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான, மிகவும் கடினமான மற்றும் மிகவும் காஸ்ட்லியான மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் "என்றார்.

English summary
If Joe Biden defeats President Donald Trump next month, he'll quickly face a new challenge: standing up a new administration to lead a divided nation through a series of historic crises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X