வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீங்க இப்படி செய்யலாமா.. கொஞ்சம் யோசிங்க பிளீஸ்!" இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த சர்வதேச நிதியம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், இது குறித்து சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் 3 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், இரு நாட்டு மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போர் இரு நாடுகளை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

விலை

விலை

இதன் காரணமாகச் சர்வதேச சந்தையில் கிட்டதட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது. போர் ஆரம்பித்த சில நாட்களிலேயே கச்சா எண்ணெய் விலை, 2008க்கு பின்னர் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதன் பின்னர் விலை சற்றே குறைந்த போதிலும், இப்போது 110 டாலர் என்ற அளவுக்கு உள்ளது. இது மட்டுமின்றி மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 கோதுமை ஏற்றுமதி தடை

கோதுமை ஏற்றுமதி தடை

குறிப்பாக, வட இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கோதுமை விலை மளமளவென உயரத் தொடங்கியது. அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் பலரும் கோதுமையை ஏற்றுமதி செய்ய விரும்புவது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. மேலும், இந்தியாவில் வெப்ப அலை உற்பத்தியும் குறைந்தது. இதையடுத்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.

 சர்வதேச நிதியம்

சர்வதேச நிதியம்

இது உலகின் சில நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இது குறித்து சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறுகையில், "நாட்டில் உள்ள 135 கோடி மக்களுக்கு இந்தியா உணவளிக்க வேண்டும் என்பது புரிகிறது. இந்த ஆண்டு அங்கு ஏற்பட்டுள்ள வெப்ப அலை விவசாய உற்பத்தியைப் பாதித்துள்ளதும் தெரிகிறது.

 மறுபரிசீலனை

மறுபரிசீலனை

ஆனால், உலகின் பல நாடுகள் இதுபோல ஏற்றுமதிக்குத் தடை விதித்தால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நம்மால் சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். எனவே, இதைத் தடுக்கும் வகையில் கூடிய விரைவில் இந்தியா இந்த ஏற்றுமதி தடை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

 கோதுமை

கோதுமை

சர்வதேச அளவில் அதிகளவில் கோதுமை செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2022இல் மட்டும் 106.41 மில்லியன் டன்களை இந்தியா அறுவடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட அளவை விட சுமார் 4.4 சதவீதம் குறைவு என்று விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து வரும் சுமார் 30% கோதுமை கிடைக்கவில்லை. போர் காரணமாக உக்ரைனில் இருந்தும் மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக ரஷ்யாவில் இருந்தும் கிடைக்கும் கோதுமை பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
International Monetary Fund chief Kristalina Georgieva strongly urged India to reconsider its ban on wheat exports: (கோதுமை இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்துக் குறித்து மத்திய அரசு) India decide to enfroce wheat export ban to reduce price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X