வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த ஆண்டு கொரோனாவால் காலி... இந்திய பொருளாதாரத்தில் அடுத்த ஆண்டு நிகழப்போகும் மாயாஜாலம்.. ஐஎம்எப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்திய பொருளாதாரம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் உள்ளதில் இருந்து 10.3% அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. எனினும் 2021 ஆம் ஆண்டில் இந்தியா 8.8% வளர்ச்சி விகிதத்துடன் முன்னேற வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.

கொரோனாவால் உள்நாட்டு உற்பத்தி இந்தியாவில் கடுமையாக சரிந்தது. இதனால் கடந்த வாரம் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட உலக வங்கி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நிதியாண்டு 9.6% அளவுக்கு சுருங்கும் என்று கணித்திருந்தது.

இதுபற்றி அப்போது பேசிய தெற்காசியாவின் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் "இந்தியாவில் நிலைமை நாம் முன்னர் கண்டதை விட மிகவும் மோசமாக உள்ளது இது இந்தியாவில் இதுவரை இல்லாத நிலைமை. மிகவும் மோசமான நிலைமை" என்று அவர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சி

அவர் சொன்னது போலவே இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரித்திரத்தில் இல்லாத நிகழ்வாக 25 சதவீதம் சரிந்தது. உலக வங்கி இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், வைரஸ் பரவுவது மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனையை கடுமையாக பாதித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.

சீனாவை முந்தும்

சீனாவை முந்தும்

இந்நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள 'உலக பொருளாதார அவுட்லுக்' அறிக்கையில், இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி பெரிய அளவில் சரிந்துள்ளதால், இந்தியாவின் பொருளாதாரம் இப்போது உள்ள அளவில் இருந்து 10.3% அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்திக்கும். எனினும் அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 8.8% வளர்ச்சி விகிதத்துடன் முன்னேற வாய்ப்புள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் ஒரு நிலையை எட்டும். இந்தியாவின் அடுத்த ஆண்டு பொருளதார வளர்ச்சி விகிதம் சீனாவில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதமான 8.2% ஐ விட அதிகமாக இருக்கும்" என தெரிவித்துள்ளது .

அமெரிக்கா வளர்ச்சி

அமெரிக்கா வளர்ச்சி

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 4.4% அளவுக்கு குறையும். ஆனால் 2021 ஆம் ஆண்டில் 5.2% அளவுக்கு உயரும். அமெரிக்காவின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் தற்போது உள்ளதைவிட 5.8% அளவு குறையும். ஆனால் அதன்பிறகு அடுத்த ஆண்டு 3.9 சதவீதம் ஆக வளரும். முக்கிய நாடுகளில் 2020 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால் , சீனாவில் மட்டுமே பொருளதாரம் நேர்மறையான வளர்ச்சியை அடையும். 1.9% நேர்மறையான வளர்ச்சி விகிதம் காட்டும் ஒரே நாடு சீனா மட்டுமே என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இந்தியாவை பாதிக்கும்

இந்தியாவை பாதிக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதலால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்கக்கூடிய நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2100 வாக்கில் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக செலவு செய்யப்போகும் தொகை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் லாபத்தில் 60% -80% வரை இருக்கும் என்று எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளின் மதிப்பீடுகள் குளிர்ந்த பகுதிகளுக்கு (எடுத்துக்காட்டாக, ஐரோப்பா, வட அமெரிக்கா , மற்றும் கிழக்கு ஆசியா), ஓரளவு குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளது.

English summary
the Indian economy, severely hit by the coronavirus pandemic, is projected to contract by a massive 10.3% this year, the International Monetary Fund said on Tuesday. However, India is likely to bounce back with an impressive 8.8% growth rate in 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X