வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. பாகிஸ்தான் பற்றி அமெரிக்க அறிக்கை இப்படி சொல்லுதே.. நல்லதில்லையே நமக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான் கான் எச்சரித்த அடுத்த நாளே பாகிஸ்தான் அட்டகாசம்

    வாஷிங்டன்: அமெரிக்க எம்பிகள் தயாரித்துள்ள ஒரு ஆய்வறிக்கை கண்டிப்பாக இந்தியாவுக்கு கவலைத் தரக்கூடிய ஒரு அம்சம்தான் என்றால் அதில் மிகையில்லை.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து விட்ட சூழ்நிலையில், இந்தியாவுக்கு எதிராக போர் எச்சரிக்கையை பாகிஸ்தான் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க எம்பிக்கள் தயாரித்துள்ள இந்த அறிக்கையின் அம்சங்கள் மிகுந்த முக்கியத்துவம் ஆனவை.

    அந்த அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது என்பது பற்றி நாம் இப்போது பார்க்கலாம் வாங்க:

    அனுபவம் இல்லை

    அனுபவம் இல்லை

    பிரதமராகும், முன்னர் இம்ரான் கான் எந்த நிர்வாக அனுபவமும் கொண்டிருக்கவில்லை. ஆனால் நவாஸ் ஷெரீப் அரசை அகற்றும் நோக்கத்துடன் தேர்தலின் போது பாகிஸ்தானின் பாதுகாப்பு சேவைகள் உள்நாட்டு அரசியலை இம்ரான் கான் சிறப்பாக கையாண்டார்.

    நிதி நெருக்கடி

    நிதி நெருக்கடி

    இம்ரான் கானின் "நயா பாகிஸ்தான்" என்ற கோஷம் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிறந்த கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் "மக்கள் நல அரசை" உருவாக்கப்போவதாக தெரிவித்தது. ஆனால் அவரது முயற்சி நாட்டின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ஸ்தம்பித்து போய்விட்டது.

    ராணுவ பிடியில் இம்ரான் கான்

    ராணுவ பிடியில் இம்ரான் கான்

    நவாஸ் ஷெரீப்பை அதிகாரத்திலிருந்து நீக்குவது, இல்லையெனில் அவரதுகட்சியை பலவீனப்படுத்துதல் என்ற மைய நோக்கத்துடன் பாகிஸ்தானின் பாதுகாப்பு சேவைகள் தேர்தலுக்கு முன்னும் பின்னும் இம்ரான் கானுடன் இணைந்து செயல்பட்டன. இப்போதும் பாகிஸ்தானின் ராணுவம்தான், அந்த நாட்டின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராணுவத்திற்கே அதிகாரம்

    ராணுவத்திற்கே அதிகாரம்

    பாகிஸ்தான் அரசின் வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் பாகிஸ்தான் ராணுவம் சொல்படிதான் பிரதமர் இம்ரான்கான் ஆடி வருகிறார் என்ற இந்த கருத்தின் மூலம், இந்தியாவுக்கு எதிராக போர் தொடுப்பது உள்ளிட்ட பெரிய நடவடிக்கைகளில் இம்ரான்கான் எந்த அதிகாரமும் பெற்று இருக்கப்போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல, பாகிஸ்தான் ராணுவத்தின் கையில் இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் இருப்பது, அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது. கண்டிப்பாக இந்தியாவுக்கு தலைவலியான விஷயம்தான்.

    English summary
    During Imran Khan's tenure as prime minister, the Pakistani military has retained the dominant influence over foreign and security policies of the country, according to a US Congressional report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X