வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாற்றில் முதல் முறை.. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஏற்றப்படும் இந்திய தேசியக் கொடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.

Recommended Video

    திடீரென Stage-லிருந்து கீழறங்கிய Collector | Women Police Officer-க்கு Salute | Oneindia Tamil

    வரும் ஆகஸ்டு 15ம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று நியூயார்க்ஸ் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய கொடி பட்டொளி வீசி பறக்க உள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு, நியூயார்க்கில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் மூவர்ண கொடியை ஏற்ற உள்ளனர். இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்கின்றனர்.

    வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு! ட்ரம்ப்பிடம் ஓடிப்போன சீக்ரெட் சர்வீஸ்.. பிரஸ் மீட் நிறுத்தம்வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு! ட்ரம்ப்பிடம் ஓடிப்போன சீக்ரெட் சர்வீஸ்.. பிரஸ் மீட் நிறுத்தம்

    முதல் முறை

    முதல் முறை

    இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) வெளியிட்ட ஒரு அறிக்கையில் 2020 ஆகஸ்ட் 15 அன்று "வரலாற்றை உருவாக்க உள்ளோம். இந்தியாவின் மூவர்ண கொடி டைம்ஸ் சதுக்கத்தில் ஏற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்" என்று அந்த அமைப்பு கூறியது, நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினராக பங்கேற்க உள்ளாராம்.

    முக்கிய இடம்

    முக்கிய இடம்

    அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்று. அங்கு இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுவது பெருமைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    ராமர் கோவில்

    ராமர் கோவில்

    கடந்த ஆகஸ்டு 5ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின்போது நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் 3டியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.

    அமெரிக்க அமைப்பு

    அமெரிக்க அமைப்பு

    1970 இல் நிறுவப்பட்ட எஃப்ஐஏ மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் ஒன்றாகும். இந்த அமைப்பின் தலைவராக இருந்த ரமேஷ் படேல் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலமானதையடுத்து, ஜூலை மாதம், அங்கூர் வைத்யா எஃப்ஐஏ தலைவராக நியமிக்கப்பட்டார்.

    English summary
    A leading diaspora group in the US will hoist India’s National Flag at the Times Square this week, the first time the Indian tricolour will be unfurled at the iconic New York City destination.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X