வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்! .

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்ற முதல் நாளிலேயே மெக்ஸிகோ சுவர், பருவ நிலை, சுகாதாரம், முஸ்லிம்கள் குறித்த டிரம்ப்பின் கொள்கைகள் ஆகியவற்றை திரும்ப பெற்றுள்ளார்.

Recommended Video

    அதிபரானதும் அசுர வேகத்தில் பணிகள்: பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையொப்பம்!

    மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம் என்று கூறி பதவியேற்ற பிடன், அமெரிக்க அதிபரான உடனேயே 15 முக்கிய மாற்றங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

    இதன் மூலம் முன்னாள் அதிபர் டிரம்ப் விடாப்பிடியாக பிடித்து தொடங்கி கொண்டிருந்த அத்தனை கொள்கைகளில் இருந்தும் அமெரிக்கா மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதுமிகப்பெரிய சீர்திருத்தம் ஆகும்.

    பிடன் கையெழுத்து

    பிடன் கையெழுத்து

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடன் நேற்று இரவு (இந்திய நேரப்படி) பதவிஏற்றார். அவர் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே 15 முக்கிய கொள்கை ரீதியான நடவடிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் குடியரசுக் கட்சியின் அதிபரான டொனால்ட் டிரம்ப் முன்வைத்த கொள்கைகளை அப்படியே தூக்கி குப்பையில் போட்டுள்ளார். குறிப்பாக கொரோனா தொற்று மற்றும் காலநிலை மாற்ற விவாகரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறி உள்ளது.

    மாற்ற போகிறோம்

    மாற்ற போகிறோம்

    ஜோ பிடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடன் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு முன்னால் 15 முக்கிய விஷயங்களுக்கு நிர்வாக ரீதியாக கையெழுத்திட்ட அவர், உத்தரவுகள், குறிப்புகள் வெளியிடுவதில் "வீணடிக்க நேரமில்லை" என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில். "நான் இன்று கையெழுத்திடப் போகும் சில நிர்வாக நடவடிக்கைகள் கொரோனா நெருக்கடியின் போக்கை மாற்ற உதவப் போகின்றன, நாங்கள் இதுவரை செய்யாத வகையில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடப் போகிறோம், மேலும் இன ரீதியான ஒற்றுமையை நோக்கி முன்னேறுவோம். இவை அனைத்தும் ஆரம்பம் தான் " என்றார்.

    வெள்ளை மாளிகை

    வெள்ளை மாளிகை

    அதிபர் ஜோ பிடன் கையெழுத்திட்ட நடவடிக்கைகளில் அமெரிக்க அரசின் சொத்துக்கள், அமெரிக்க அரசு ஊழியர்களுக்கான முககவச ஆணை, கொரோனா வைரஸ் காரணமாக புதிய வெள்ளை மாளிகை அலுவலகத்தை நிறுவுவதற்கான உத்தரவு மற்றும் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதற்கான செயல்முறையை நிறுத்துதல் ஆகியவை தொடர்பானது ஆகும்.

    பருவ நிலை மாற்றம்

    பருவ நிலை மாற்றம்

    பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்வதற்கான ஆவணத்தில் பிடன் கையெழுத்திட்டார். அத்துடன் சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ்எல் எண்ணெய் குழாய்த்திட்டத்திற்கு வழங்கப்பட்ட அதிபரின் அனுமதியை ரத்து செய்வது உட்பட காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக கடுமையான உத்தரவை பிறப்பித்தார்.

    மெக்ஸிகோ சுவர்

    மெக்ஸிகோ சுவர்

    குடியேற்றத்தை தடுக்கும் டிரம்பின் அவசர அறிவிப்பை ரத்து செய்தார். மெக்ஸிகோவில் எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு நிதியளிக்க உதவுவது மற்றும் சில பெரும்பான்மை-முஸ்லீம் நாடுகளுக்கான பயணத் தடை போன்றவையும் பிடனின் முதல் நாள் அதிரடியால் முடிவுக்கு வந்துள்ளது டே ஒன் திட்டங்கள் என்பது பிடன் விரைந்து செயல்பாடுவார் என்பதற்கு ஆரம்பம் என்று அவரது ஊடக செயலாளர் ஜென் சாகி, கூறியதுதான் ஹைலட்டே..!

    English summary
    In sweeping Day 1 action US President Joe Biden signed 15 executive actions shortly after being sworn on Wednesday, undoing policies put in place by his Republican predecessor, Donald Trump, and making his first moves on the pandemic and climate change.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X