வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க தேர்தல் செயல்முறை "குழப்பத்தில் சிக்கியுள்ளது" விசாரணை நடத்த எம்பி லிசா மெக்லைன் கோரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் எம்பியாக தேர்வாகி உள்ள லிசா மெக்லைன் வரும் ஜனவரி மாதம் எம்பியாக பொறுப்பேற்க உள்ளார்.இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சபாநாயகர் நான்சி பெலோசியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் வயதான மற்றும் முதியவர்கள் உள்பட பலருக்காக கொரோனா காரணமாக அஞ்சல் வாக்குகள் அளிக்கப்படடது. அதாவது மெயில் இன் வாக்குகள் உரிமை அளிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஏராளமானோர் வாக்களித்தனர்.

Incoming Michigan congresswoman seeks investigation into 2020 presidential election

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்கங்ளிலும் வாக்குகள் எண்ணப்பபட்டன. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 306 எலக்ட்ரோல் வாக்குகள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம் ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 232 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். டிரம்பின் தோல்வி கடந்த இரண்டு தினங்ளுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. அதாவது பிடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதியானது.

ஜோ பிடன் வெள்ளை மாளிகை ஆலோசகர் செட்ரிக் ரிச்மண்டுக்கு கொரோனாஜோ பிடன் வெள்ளை மாளிகை ஆலோசகர் செட்ரிக் ரிச்மண்டுக்கு கொரோனா

வரும் ஜனவரி 20ம் தேதி ஜோ பிடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பொறுப்பேற்க உள்ளனர். இந்த சூழலில் டிரம்பின் குடியரசுக்கட்சியின் புதிய எம்பிக்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி வருகிறார்கள். அந்த வகையில் 2020 ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று லிசா மெக்லைன் என்ற எம்பி ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.. அமெரிக்க தேர்தல் செயல்முறை "குழப்பத்தில் சிக்கியுள்ளது" என்று கூறி கடிதத்தையும் இணைத்துள்ளார்.

English summary
Congresswoman-elect Lisa McClain, a Republican who will join the U.S. House in January, is asking House Speaker Nancy Pelosi to investigate allegations of voter fraud in the 2020 presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X