வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரான இந்தியா.. ஐ.நா. சபையில் பட்டொளி வீசி பறக்கும் இந்திய தேசியக் கொடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக, இந்தியா பொறுப்பேற்ற நிலையில், இந்திய தேசியக் கொடி அங்கு பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபை செயல்பட்டு வருகிறது. ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

ராஜஸ்தான், கேரளா, ஹிமாச்சல் பிரதேசம்.. நாடு முழுக்க வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்.. மக்களே உஷார்!ராஜஸ்தான், கேரளா, ஹிமாச்சல் பிரதேசம்.. நாடு முழுக்க வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்.. மக்களே உஷார்!

அதேநேரம், பிராந்திய அடிப்படையில், 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள் ஆகும். மொத்தம் உள்ள, 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில், ஐந்து இடங்களுக்கான தேர்தல், ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

India assumes the membership of the Security Council, flag installation held

இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில், 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஐ.நா. தலைமையகத்தில், ஜூன் மாதம் நடைபெற்றது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான இடத்துக்கு, இந்தியா போட்டியிட்டது. இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஓட்டுப்போட்டதால், தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டது. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா, எட்டாவது முறையாக, ஜனவரி 2ம் தேதி பொறுப்பேற்றது. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா பொறுப்பு வகிக்கும்.

இதையடுத்து, இன்று ஐ.நா.சபையில், இந்திய தேசிய கொடி பொருத்தப்பட்டது.

எட்டாவது முறையாக பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்றைய கொடி நிறுவல் விழாவில் பங்கேற்பது பெருமைக்குரியது என்று ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்தார். இந்தியா வளரும் நாடுகளுக்கு ஒரு குரலாக இருக்கும். பயங்கரவாதம் போன்ற மனிதகுலத்தின் பொதுவான எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா ஒருபோதும் தயங்காது என்றும் திருமூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.

English summary
As India assumes the membership of the Security Council for the eighth time, it is an honour for me as the Permanent Representative of India to take part in today’s flag installation ceremony: TS Tirumurti, Permanent Representative of India to UN at Flag Ceremony at UNSC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X