வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலக நாடுகளில் குறையும் பாதிப்பு.. இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்து கொரோனா உச்சம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பு 157,523,911 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

Recommended Video

    எச்சரிக்கை : Corona நோயாளிகளுக்கு Blood Clot, மாரடைப்பு, பக்க வாதம் ஏற்படலாம் | Oneindia Tamil

    இந்தியாவில் 4,01,326 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,194 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. சென்னை கமிஷ்னராக ஷங்கர் ஜிவால் நியமனம்! தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. சென்னை கமிஷ்னராக ஷங்கர் ஜிவால் நியமனம்!

    அதிக தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 78,337பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,217 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா விஸ்வரூபம்

    கொரோனா விஸ்வரூபம்

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் கொரோனா தொடர்ந்து போட்டு தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 57,523,911பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,283,183 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 135,620,021 பேர் குணமடைந்துள்ளனர்.

    அமெரிக்காவில் குறையும் பாதிப்பு

    அமெரிக்காவில் குறையும் பாதிப்பு

    அமெரிக்காவில் கொரோனா முன்பை விட குறைந்து வருகிறது. அங்கு 47,565 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 759 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக வருகிறது. அங்கு ஒரே நாளில் 78,337 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,217 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

    இந்தியாவில் ஆதிக்கம்

    இந்தியாவில் ஆதிக்கம்

    இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பில், உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 4.01,326 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 4,194 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,731,261 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் இதுவரை 21,886,611 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 238,265 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அங்கு 2,490 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 15 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தாலி பாதிப்பு

    இத்தாலி பாதிப்பு

    பிரான்சில் 19,124 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 235 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 10,554 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 207 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 376பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 245 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 20,107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 278 பேர் பலியாகியுள்ளனர்.

    English summary
    India continues to be number one in the world in terms of corona damage and loss of life
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X