வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணியன் பூங்குன்றனார், புத்தர், விவேகானந்தர் நாட்டிலிருந்து மெசேஜுடன் வந்துள்ளேன்-ஐநாவில் மோடி அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐ.நா. சபைபில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

    வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்தினார்.

    அப்போது தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையாக அவர் சாடினார். இந்தியா, புத்தர், விவேகானந்தர், கணியன் பூங்குன்றனார் போன்றோர் வாழ்ந்த பூமி என்பதை அவர் தனது உரையில் நினைவுபடுத்தினார்.

    India is against terrorism: Narendra Modi says at UN

    மோடி பேசியதாவது: எங்கள் நாடு, போரை கிடையாது, புத்தரின் அமைதி செய்தியை உலகத்துக்கு அளித்துள்ளது. இதன் காரணமாகத்தான் நாங்கள் எப்போதுமே தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.

    உலகத்தையும் தீவிரவாதம் என்ற அரக்கனின் பிடியில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கிறோம். 3000 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்த சிறந்த புலவர் கணியன் பூங்குன்றனார், உலகின் தொன்மையான தமிழ் மொழியில், "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று பாடியுள்ளார். இதன் அர்த்தம், எங்களுக்கு அனைத்து இடமும் சொந்தம். அனைவருமே எங்கள் உறவினர் என்பது. இதுதான் இந்தியாவின் தனித்தன்மை.

    உலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபைபில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சுஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபைபில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

    தீவிரவாதம் என்பது இந்தியாவுக்கு மட்டுமான சவாலாக நாங்கள் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கும், மனிதத்திற்கும் எதிரான செயலாக பார்க்கிறோம். எனவே மொத்த உலகமும் தீவிரவாதத்திற்கு எதிராக திரள வேண்டும்.

    125 ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த ஆன்மீக குருவான சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் நடந்த உலக மதங்களின் மாநாட்டின்போது, இந்த செய்தியை உலகுக்கு வழங்கினார். அந்த செய்தி இதுதான், "நல்லிணக்கமும் அமைதியும்தான் தேவை. மற்றும் கருத்தும் வேறுபாடுகளும் இல்லை ". இன்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சார்பாக நானும் அதையே கூறுகிறேன். "நல்லிணக்கமும் அமைதியும்" மட்டுமே நாங்கள் உலகிற்கு அளிக்கும் செய்தி.

    இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

    English summary
    We belong to a country, that has given the world, not war, but Buddha’s message of peace. And that is the reason why, our voice against terrorism, to alert the world about this evil, rings with seriousness and the outrage, Narendra Modi said at UN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X