வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்.. 3,32,503 தினசரி பாதிப்புடன் புதிய உச்சம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,32,503 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,256 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    அதிர வைக்கும் கொரோனாவின் புதிய உச்சம்: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3.32 லட்சம் தொற்று!

    உச்சத்தில் கொரோனா... மேற்கு வங்கத்தில் பிரசாரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் அதிரடிஉச்சத்தில் கொரோனா... மேற்கு வங்கத்தில் பிரசாரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி

    அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,740 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 884 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா அதிகரிப்பு

    கொரோனா அதிகரிப்பு

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பாரபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 145,304,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 3,084,014 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 123,571,467 பேர் குணமடைந்துள்ளனர்.

    பிரேசிலில் பாதிப்பு

    பிரேசிலில் பாதிப்பு

    அமெரிக்காவில் கொரோனா கொஞ்சம் ஓய்வு எடுத்து வருகிறது. அங்கு 66,740 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 884பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து அதிக பாதிப்பு நிலவி வருகிறது. அங்கு ஒரே நாளில் 49,344 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,070 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

    இந்தியா தொடர்ந்து முதலிடம்

    இந்தியா தொடர்ந்து முதலிடம்

    இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 332,503 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,256 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,428,775 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இங்கிலாந்தில் 2,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 18 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தாலியின் நிலை என்ன?

    இத்தாலியின் நிலை என்ன?

    பிரான்சில் 34,318 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 283 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 16,232 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 360 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 397 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 10,814 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    In India, the Corona continues to be number one globally and continues to take shape. In the last 24 hours, 3,32,503 people have been diagnosed with the infection. A further 2,256 people died in the corona
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X