வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் மோடிக்கு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்.. ஒரே பிஸி.. காஷ்மீர் பற்றி ஐநாவில் விவாதிக்க மாட்டார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெற உள்ளது. வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே இந்த விசிட் குறித்து விரிவான தகவல்களை இன்று நிருபர்களிடம் வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் நிகழ்ச்சியில், ஐக்கிய நாடுகள் சபையில் பலதரப்பு பேச்சுவார்த்தைகளும் இருக்கும் என்று அவர் கூறினார். டெக்சாஸில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்பதும், அமெரிக்காவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையும் இதில் அடங்கும்.

India Wont Discuss Article 370 At UN: Foreign Secretary Vijay Gokhale

தென் கொரியாவின் அதிபர், சிங்கப்பூர் பிரதமர், நியூசிலாந்து பிரதமர், பங்களாதேஷ் பிரதமர், ஜமைக்காவின் பிரதமர் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல தலைவர்களை பிரதமர் சந்திக்க உள்ளார்.

செப்டம்பர் 22 ஆம் தேதி டெக்சாஸில் நடைபெறும் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்து கொள்வார்.

செப்டம்பர் 24 மதியம், மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நிகழ்வை நடத்த உள்ளனர். இந்த நிகழ்வில் தலைப்பு 'தற்காலத்திற்கும் பொருந்தும் காந்தி'. ('தலைமைத்துவ விஷயங்கள்: சமகாலத்தில் காந்தியின் தொடர்பு')

செப்டம்பர் 25 ஆம் தேதி, பிரதமர் மோடி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றுவார். பிரதமரின் அமெரிக்க விசிட் கடந்த 5 ஆண்டுகளில் நிலையான வளர்ச்சியின் குறிக்கோள்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காலநிலை மாற்றம் போன்றவற்றைப் பற்றி பேசும்.

காந்தியின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையில், காஷ்மீருக்கு 370 வது பிரிவில் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எந்த விவாதமும் இருக்காது. உலகில் பல பிரச்சினைகள் உள்ளன, பயங்கரவாதம் நிச்சயமாக அதில் ஒரு பிரச்சினை, ஆனால் நாம் அதில் தற்போது முழுக்க கவனம் செலுத்த மாட்டோம்.

பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை அனுமதிக்காதது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது சர்வதேச சட்டங்களின் வெளிப்படையான மீறலாகும். இந்த விஷயத்தை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் பேசப்படுமா, இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போதெல்லாம், அதை பொருத்தமான மன்றத்தில் எழுப்புகிறோம். இந்த சம்பவம் நிச்சயமாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Foreign Secretary Vijay Gokhale says Article 370 India's Internal Matter, Won't Discuss It At UN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X