வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாஷ்... நிலவுக்கு பறக்க உள்ள இந்தியர்... நாசா அறிவிப்பு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் 'ஆர்டெமிஸ்' என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு செல்லும் 18 பேரின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அறிவித்து உள்ளது.

இந்த பட்டியலில் இந்திய வம்வாசவளி ராஜா ஜான் வர்புதூர் சாரி என்பவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. வருகிற 2024 ம் ஆண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

Indian-American Raja Chari in NASAs manned Moon mission

விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் அமெரிக்கா, 1969ல் நிலவில் வீரர்களை இறக்கி முதல் சாதனையை நிகழ்த்தியது தற்போது, இரண்டாவது முறையாக, நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டுள்ளது.அமெரிக்காவின், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' 'ஆர்டெமிஸ்' திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நிறைவேற்றபட உள்ளது. அந்த வகையில் நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. இந்த 18 பேருக்கும் நாசா முறைப்படியான பயிற்சி அளிக்கும். அதன் பிறகு இவர்கள் நிலவுக்கு செல்வார்கள்.

இதற்காக ஒன்பது ஆண் மற்றும் ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை அதிபர் மைக் பென்ஸ், புளோரிடாவில் உள்ள, கென்னடி விண்வெளி நிலையத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த 18 பேரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா ஜான் வர்புதூர் சாரி(43 ) என்பவர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவரும் நிலவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க விமானப்படை அகாடமி, எம்ஐடி மற்றும் யு.எஸ். நேவல் டெஸ்ட் பைலட் பள்ளியின் பட்டதாரியான ராஜா சாரி, இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2017 -ல் விண்வெளி வீரர் பயிற்சிக்காக நாசாவால் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்பு விண்வெளி வீரருக்கான ஆரம்பகட்ட பயிற்சியை முடித்த பின்னர், சாரி தற்போது நிலவுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆர்டெமிஸ்' திட்டத்தை, வருகிற 2024ல் நிறைவேற்ற, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.ஆனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதால் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் வரும் என தெரிகிறது.

English summary
Raja Sari, of Indian descent, is on the list of 18 people going to the moon in the United States under the 'Artemis' program
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X