வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க மருத்துவதுறையில் இந்திய மருத்துவருக்கு உயரிய பதவி அளித்தது டிரம்ப் நிர்வாகம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க மருத்துவதுறையில் இந்திய மருத்துவர் சம்பந்த் ஷிவாங்கிக்கு உயரிய பதவி அளித்துள்ளது டிரம்ப் நிர்வாகம். அவரை மனநல சுகாதார சேவைகள் நிர்வாகத்தின் தேசிய ஆலோசனை குழுவில் பணியாற்றுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க சுகாதார துறை செயலாளர் அலெக்ஸ் எம் அசார் , இந்திய மருத்துவர் சம்பந்த் ஷிவாங்கியை அமெரிக்க மனநல சுகாதார சேவைகள் நிர்வாகத்தின் தேசிய ஆலோசனை குழுவில் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், மருத்துவர் சம்பந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

indian doctor Sampat Shivangi Appointed to Key US Health Panel by Trump Administration

அவருடைய பதவி காலம் உடனடியாக தொடங்கி 2023 ஜூலை 30 ம் தேதி நிறைவு பெறும் என்றும் அலெக்ஸ் கடிததத்தில் கூறியுள்ளார்.

இந்த அழைப்புக்காக அதிபர் டிரம்புக்கும், சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் எம் அசாருக்கும், மருத்துவர் சம்பத் நன்றி தெரிவித்துள்ளார். தன்னை மனநல சுகாதார சேவைகள் மையத்தின் ஆலோசனை குழுவில் நான்கு ஆண்டுள் பணியாற்றுமாறு நியமித்திருப்பது தனக்கு பெருமை அளிப்ப்தாக அவர் கூறியுள்ளார்.

மேலும் மிசிசிப்பி மாநில மனநல வாரியத்தில் துணைத் தலைவராகவும், தலைவராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றிய தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேசத்திற்கு சேவை ஆற்ற ஆர்வமாக உள்ளேன் என்றும் மருத்துவர் சம்பத் கூறியுள்ளார்.

புஷ் நிர்வாகத்தில் 2005 முதல் 2008 வரை அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் ஆலோசகராக சம்பந்த் சிவாங்கி பணியாற்றியிருந்தார். இந்திய அமெரிக்க உறவில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு 2017ம் ஆண்டு பிரவாசி பாதிய சம்மன் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் உறுப்பினர் ஆவார், சம்பந்த் சிவாங்கி அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர் ஆவார்

English summary
indian doctor Sampat Shivangi Appointed to To Key US Health Panel by Trump Administration. He invited to serve on the Substance Abuse and Mental Health Services Administration's (SAMHSA) Center for Mental Health Services National Advisory Council.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X