வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க வன்முறை போராட்டக்களத்தில்...இந்திய தேசியக்கொடி...வருண் காந்தி கண்டனம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் வன்முறை நிகழ்த்திய டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டக்களத்தில் இந்திய தேசியக் கொடியை வைத்து இருந்ததற்கு பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையில் 4 பேர் இறந்து விட்டனர். டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Indian flag seen in US rioters, Varun Gandhi asks why

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். வருகிற 20-ந்தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.

டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, அந்த கட்டிடத்தின் முன்பு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதில் ஒருவர் இந்திய தேசிய கொடியை கையில் வைத்து இருந்தார்.

அமெரிக்காவில் அதிகார மாற்றத்திற்கு ஒப்புதல்.. வேறு வழியின்றி பணிந்தார் டிரம்ப் அமெரிக்காவில் அதிகார மாற்றத்திற்கு ஒப்புதல்.. வேறு வழியின்றி பணிந்தார் டிரம்ப்

இதற்கு பாஜக எம்.பி. வருண் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் ஒருவர் இந்திய தேசிய கொடியை கையில் வைத்திருப்பது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட வருண் காந்தி, அங்கு(அமெரிக்கா) ஏன் நமது தேசியக்கொடி உள்ளது ??? இது நிச்சயமாக நாம் பங்கேற்கத் தேவையில்லாத ஒரு சண்டை'' ட்வீட் செய்துள்ளார். இது என்ன விளையாட்டு போட்டியா? இந்திய தேசியக்கொடியை கையில் வைத்து கொள்ள என்று பல்வேறு தரப்பினரும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

English summary
The BJP has blamed Trump supporters who carried out violence in the United States for holding the Indian national flag on the battlefield. MP Varun Gandhi has condemned
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X