வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விமான நிலையத்தில் லக்கேஜ் திருடிய டிரம்ப்பின் பார்ட்னர் கைது.. கலகலப்பு காரணத்தை கூறிய தினேஷ் சாவ்லா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விமான நிலையத்தில் லக்கேஜை திருடியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் தொழில் பார்ட்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான தினேஷ் சாவ்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்க தொழிலதிபர் தினேஷ் சாவ்லா. இவர் தனது சகோதரருடன் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சாவ்லா ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினருக்கு சொந்தமான ஹோட்டல்களிலும் பார்ட்னராக இருந்தார். இவர் அமெரிக்காவின் டென்னலியில் உள்ள மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்தில் 2 லக்கேஜுகளை திருடியதாக புகார் எழுந்தது.

டிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு டிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு

சோதனை

சோதனை

மேலும் அந்த லக்கேஜுகளை திருடிய அவர் தனது காரில் வைத்து விட்டு விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டார். இதையடுத்து அந்த காரை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஒரு சூட்கேஸ் இருந்தது.

போலீஸில்

போலீஸில்

இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து தான் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அந்த லக்கேஜில் இருந்த 4000 அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களையும் தான் எடுத்துக் கொண்டதாக போலீஸில் தெரிவித்தார்.

கைது

கைது

இதுகுறித்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் திருடுவது குற்றம் என எனக்கு தெரியும். இருந்தாலும் திரில்லிற்காகவும் உற்சாகத்துக்காகவும் இதை செய்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் சாவ்லாவை கைது செய்தனர்.

நீண்டகாலம்

நீண்டகாலம்

இது போல் நீண்டகாலமாக அவர் லக்கேஜுகளை திருடி வந்தது தெரியவந்தது. எனினும் ஏற்கெனவே எந்தெந்த லக்கேஜுகள், என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

English summary
Indian Origin Dinesh Chawla arrested for stealing luggage in airport. He says that stealing luggage is wrong, but he did it for thrill and excitement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X