வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

George Floyd: பற்றி எரியட்டும்.. ஹோட்டல்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் மீது கோபப்படாத ஓனர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டு போராடி வரும் போராட்டக்காரர்கள் இந்திய ரெஸ்டாரன்ட்டுக்கு தீ வைத்த போது அதன் உரிமையாளர் அவர்கள் மீது கோபம் கொள்ளாமல் ஜார்ஜுக்கு நியாயம் வேண்டும் என கோரியுள்ளார்.

Recommended Video

    அமெரிக்காவில் தொடரும் போராட்டம்... தயார் நிலையில் ராணுவம்

    அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது விசாரணை அதிகாரி, அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார்.

    சாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.சாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.

    கொலை

    கொலை

    இதில் ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். போலீஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அதிலும் மினசோட்டா, ஜார்ஜியா, ஓகியோ, கென்டக்கி, டெக்சாஸ், கொலம்பியா ஆகிய இடங்களில் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    ரெஸ்டாரன்ட்

    ரெஸ்டாரன்ட்

    மின்னபொலிஸில் உள்ளது காந்தி மகால் என்ற ரெஸ்டாரன்ட். இது வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. இந்த ரெஸ்டாரன்ட்டுக்கு போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை தீ வைத்தனர். அப்போது அதன் உரிமையாளர்களுக்கு அவர்கள் மீது கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. மாறாக ஹோட்டல்தானே பற்றி எரியட்டும். ஜார்ஜுக்கு நியாயம் வேண்டும் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போராட்டக்காரர்

    போராட்டக்காரர்

    இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளரின் மகள் ஹஃப்சா தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களது காந்தி மகால் பற்றி எரிந்திருக்கலாம். ஆனால் எங்கள் இன மக்களுக்கு ஆதரவாகவும் பாதுகாக்கவும் உதவும் எங்கள் மனதில் உள்ள தீப்பிழம்புகள் ஒரு நாளும் அணைக்க முடியாது என தெரிவித்துள்ளார். அது போல் அவரது தந்தை ரூகெல் ஹோட்டல் பற்றி எரிந்தது கவலை அளிக்கிறதுதான், ஆனால் நாங்கள் போராட்டக்காரர்களுடன் இணைந்து நிற்கிறோம்.

    ஜார்ஜ் கொலை

    ஜார்ஜ் கொலை

    எங்கள் கட்டடம் எரியட்டும், ஜார்ஜ் கொலைக்கு நீதி வேண்டும். அவரை கொலை செய்த அதிகாரிகள் சிறையில் தள்ள வேண்டும். எங்களை பற்றி கவலை வேண்டாம், நாங்கள் மீண்டும் கட்டிக் கொள்வோம், ஹோட்டல் இழப்பிலிருந்து மீண்டும் வருவோம். ஹோட்டல் எரிந்தாலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    English summary
    India Restaurant owners dont have anger on protestors while they burnt the hotels for justice for George Floyd.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X