வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளை மாளிகையில் பட்டுப் புடவையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய பெண் சுதா சுந்தரி நாராயணன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் சுதா சுந்தரி நாராயணன் அந்த நாட்டு குடியுரிமையை அதிபர் டிரம்ப்பிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுதா சுந்தரி நாராயணன், இந்தியாவின் கலாசாரமான பட்டுச் சேலை அணிந்து பங்கேற்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்தியா, லெபனான், கானா, பொலிவியா மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சுதா சுந்தரி நாராயணனுக்கு அமெரிக்கா குடியுரிமை வழங்கப்பட்டது.

Indian Software developer Sudha Sundari Narayanan becomes US citizen in ceremony at White House

இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப், சுதா சுந்தரியின் சிந்தனைகள், யோசனைகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கும். அவர் மிகவும் திறமையான சாப்ட்வேர் என்ஜினியர் என புகழ்ந்தார். அத்துடன் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றிருப்பதால் இந்த நாட்டின் சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் டிரம்ப் அறிவுறுத்தினார்.

தம்மை அமெரிக்கா அதிபர் டிரம்ப் வாழ்த்தி பேசியது குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார் சுதா சுந்தரி. இந்த நிகழ்ச்சியில் இந்திய கலாசார உடையான பட்டுச் சேலையில் சுதா சுந்தரி பங்கேற்றிருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

English summary
Indian Software developer Sudha Sundari Narayanan became US citizen in ceremony at White House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X