வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பெட்டியில் அது என்ன.. அடடே நம்ம செந்தமிழப்பா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளில் தமிழில் அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்து அமெரிக்க வாழ் தமிழர்கள் பெருமிதத்துடன் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் டிரம்பிற்கு எதிராக அங்கு வாழும் அமெரிக்க வாழ் இந்தியர்கள், தமிழர்கள் உள்ளனர்.

Instruction for US Polls given in Tamil Language

இவர்களின் ஆதரவு பெரும்பாலும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கே உள்ளது. இந்த நிலையில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அந்த மாகாணங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கலிபோர்னியாவில் சாண்டா கிளாரியாவுக்கு அனுப்பப்பட்ட வாக்குப் பெட்டியில் தமிழில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை புகைத்துடன் நமது வாசகர் அசோக் சன்னிவேல், கலிபோர்னியாவில் இருந்து அனுப்பியுள்ளார்.

Instruction for US Polls given in Tamil Language

அவர் கூறுகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழில் அறிவிப்புகள் உள்ளன. தமிழ் அங்கும், இங்கும், எங்கும், என்றும் வாழ்க என தெரிவித்துள்ளார். அந்த வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டை எங்கே போட வேண்டும் என்பதற்கான அறிவிப்புகள்தான் தமிழில் உள்ளன.

தமிழகத்தில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை புகுத்த மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடல் கடந்து நம் தாய்மொழியாம் தமிழின் புகழ் கொடி கட்டி பறப்பது பெருமையே! வாழ்க தமிழ்.. வாழ்க தமிழகம்!

English summary
Instruction for ballot box given in Tamil Language ahead of US Presidential election 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X