வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் டிரம்புக்காக வேலை செய்த அதிகாரிகள்.. வெளியான ரிலீஸ்.. பின்னணியில் ஈரான்.. பகீர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில். டிரம்புக்கு ஆதரவாக வேலை செய்த அதிகாரிகள் இவர்கள் தான் என்று பட்டியல் வெளியானது. இந்த பட்டியலில் உள்ள அதிகாரிகளுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்காவின் எப்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"மக்களின் எதிரிகள்" என்ற தலைப்பில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கூட்டாட்சி மற்றும் மாநில அதிகாரிகள் மற்றும் வாக்களிப்பு அமைப்புகளின் ஊழியர்கள் பட்டியல் ஆன்லைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களை பழிவாங்க வேண்டும் என்று மிரட்டலுடன் வடிவமைக்கப்பட் பட்டியலை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ கண்டறிந்துள்ளது.

Iran created pro-Trump hit list of U.S. election officials: fbi

எஃப்.பி.ஐ மற்றும் யு.எஸ். சைபர் செக்யூரிட்டி ஏஜென்சிகள் "ஈரானிய இணைய குழுக்கனே இத்தகைய பட்டியலை உருவாக்கிய இருக்கும் என்பதற்கான மிகவும் நம்பகமான தகவல்களை அந்த பட்டியல் காட்டுகிறது என்று கூறியுள்ளன. ஆனால் அமெரிக்கா புலனாய்வு ஏஜென்சிகளோ எப்படி அமெரிக்க அதிகாரிகளின் பட்டியலை அவர்களா உருவாக்க முடிந்தது என்ற விவரத்தை விரிவாகக் கூறவில்லை.

அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சம்பந்தமே இல்லாமல் ஈரான் மீது அமெரிக்கா பழிபோடுவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் பணியின் செய்தித் தொடர்பாளர் அலிரெஸா மிரியோசெஃபி குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில். கடந்த காலங்களில் அமெரிக்காவின் சைபர் தாக்குதல்களால் ஈரான் குறி வைக்கப்பட்டிருந்தது என்றும் குற்றம்சாட்டினார். "ஈரான் தான் ஸ்டக்ஸ்நெட் உள்ளிட்ட இணைய தாக்குதல்களுக்கு மிகப் பெரிய அளவில் பலியானது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களில் இணைய தாக்குதல்களைத் தடுக்க உலகளாவிய பொறிமுறையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை எப்போதுமே ஈரான் வலியுறுத்தி வருகிறது . ம், உலகின் மிகப்பெரிய இணைய அச்சுறுத்தலாக உள்ள அமெரிக்கா, ஒரு சர்வதேச பொறிமுறையை உருவாக்குவதைத் தடுத்துள்ளது, மேலும் ஈரானில் குழப்பத்தை உருவாக்குதான் அதன் நோக்கம். அதைத்தான் பகிரங்கமாக அறிவிக்கிறது.

அதிபர் பதவியில் கடைசி காலம்... இறுதியாக ஒரு முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கிளம்பும் 'அதிபர்' டிரம்ப்அதிபர் பதவியில் கடைசி காலம்... இறுதியாக ஒரு முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கிளம்பும் 'அதிபர்' டிரம்ப்

வன்முறையைத் தூண்டுவதிலும், அமெரிக்காவில் அமைதியின்மையை உருவாக்குவதிலும் ஈரான் ஈடுபடவில்லை, ஈரானுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் இருந்த அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை நினைவூட்டும் வகையில் இருக்கினற்ன.

English summary
Iran created an online "hit list" of U.S. government officials who helped conduct and certify the 2020 U.S. presidential election. Titled "Enemies of the people," the list was framed as a call to arms for supporters of President Donald Trump to take revenge on more than a dozen federal and state officials, as well as employees of the voting equipment manufacturer Dominion Voting Systems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X