வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆண்டவனே.. டிரம்பால் இன்னும் என்னெல்லாம் நடக்குமோ.. எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடென்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரான் - அமெரிக்கா என்ன தான் பிரச்னை... இவர்களில் யார் பலசாலி ?

    வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் செயலால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் வேதனை தெரிவித்துள்ளார்.

    ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான அந்நாட்டு ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான். இதில் 80 அமெரிக்க வீரர்கள் இறந்துவிட்டதாக ஈரான் சொல்கிறது.

    Iran intensification shows Trump dangerously incompetent: Democratic presidential candidate Joe Biden

    ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், யாருமே சாகவில்லை என்றும் லேசான சேதம் மட்டுமே ஏற்பட்டது என்றும் கூறினார். சுலைமானி அமெரிக்க இலக்குகளை தாக்க திட்டம் தீட்டியதாகவும் அதை தடுத்து நிறுத்திவிட்டதாகவும் நாட்டு மக்களிடம் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடென் அளித்த பேட்டியில், ஈரான், ஈராக்கில் என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது. ஆனால் என்ன நடக்கும் என்பதை யூகிப்பது கஷ்டம். ஆனால் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்பது மட்டும் உறுதி.

    உயிர் தப்பிய பல நூறு வீரர்கள்.. அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த சீக்ரெட் மெசேஜ்.. ஈரான் ஏமாந்த கதை! உயிர் தப்பிய பல நூறு வீரர்கள்.. அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த சீக்ரெட் மெசேஜ்.. ஈரான் ஏமாந்த கதை!

    இதற்கு எல்லாம் காரணம் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மற்றும் சுலைமாணியை கொல்ல உத்தரவிட்டது போன்ற அதிபர் டிரம்ப் எடுத்த முடிவுகள் தான் காரணம். ஈரானின் புனித தலங்களில் குண்டு வீசுவேன் என மிரட்டி இருக்கிறார். அவரால் என்ன நடக்குமோ என ஆண்டவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்" என்றார்.

    English summary
    Democratic presidential candidate Joe Biden said that President Donald Trump's escalation of tensions with Iran proves him to be "dangerously incompetent"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X