வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா வீரர்கள் உயிரிழக்கவில்லை- ஈரானுக்கு "வார்னிங்" - யு.எஸ் அதிபர் டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்ட்ன்: ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் ஈராக்கில் உள்ள அமெரிக்கா வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை; இனியும் அமெரிக்காவை ஈரான் மிரட்டுவதை அனுமதிக்க முடியாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் அமெரிக்காவின் விமானப் படை முகாம்கள் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்தியது. இதில் 80 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

Iran will never be allowed to have nuclear weapon, says US President Trump

இத்தாக்குதல் குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரானின் தாக்குதலில் அமெரிக்கா வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்.

ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி முன்னரே கொல்லப்பட்டிருக்க வேண்டிய நபர். ஈரான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

ஆல் இஸ் வெல்.. பதற்றமான சூழலில் டிரம்ப் செய்த அந்த டிவிட்.. அதிபரால் கொதித்தெழும் அமெரிக்கர்கள்!ஆல் இஸ் வெல்.. பதற்றமான சூழலில் டிரம்ப் செய்த அந்த டிவிட்.. அதிபரால் கொதித்தெழும் அமெரிக்கர்கள்!

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. ஈரானை உலக நாடுகள் இணைந்து தனிமைப்படுத்த வேண்டும்.

போர் தொடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும்., ஈரான் மீதான பொருளாதார தடைகள் தொடரும். அமெரிக்காவை மிரட்டும் போக்கை ஈரான் நிறுத்த வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

English summary
US Prsident Trump Said that Iran will never be allowed to have nuclear weapons..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X