வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உறையும் ரத்தம்.. கொரோனாவால் இறப்பதற்கு முக்கிய காரணம் இதுவா? ஆய்வில் ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் , அந்த வைரஸ் ரத்தத்தில் கட்டிகளை ஏற்படுத்துவதாகவும் இது மாரடைப்பு, பக்கவாதத்திற்கான ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்றும் உட்டா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையையில் கூறப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் இறப்பதற்கு இரத்தம் உறைதல், மிக முக்கிய காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்ததிற்கும் அதிகமாக மக்கள் இதுவரை இறந்துவிட்டனர். தினமும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புடன் லட்சக்கணக்கானோர் கொரோனாவில் சிக்கி வருகிறார்கள். இதற்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

Is Clotting of Blood Main Culprit for Covid-19 Deaths?

இந்நிலையில் கொரோனா தொற்று குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் நாள்தோறும் புதிய ஆய்வு தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில். அமெரிக்க சொசைட்டி ஆஃப் ஹீமாட்டாலஜி இதழான பிளட் என்ற புத்தகத்தில் உட்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில். கொரோனா நோய்த்தொற்றின் போது உருவாகும் அழற்சி புரதங்கள் பிளேட்லெட்டுகளின் செயல்பாட்டை கணிசமாக மாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவை "ஹைபராக்டிவ்" ஆகின்றன என்றும் ஆபத்தான மற்றும் ஆபத்தான ரத்தக் கட்டிகளை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1 கோடியை கடந்த கொரோனா சோதனை.. நாடு முழுக்க 7 லட்சம் பேர் பாதிப்பு.. 19 ஆயிரம் பேர் பலிஇந்தியாவில் 1 கோடியை கடந்த கொரோனா சோதனை.. நாடு முழுக்க 7 லட்சம் பேர் பாதிப்பு.. 19 ஆயிரம் பேர் பலி

Recommended Video

    Health tips : மூட்டுவாதம், தோள்பட்டை வலியா.. கொரோனா வந்துடும்னு பயமா..?

    இதன்படி கொரோனா தொற்று உடலை பாதிக்கும் மற்றொரு வழியை விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் ரத்த பிளேட்லெட்டுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது சில நோயாளிகளுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற கடுமையான சிக்கல்களுக்கு பங்களிக்கிறது. எனினும் ரத்த பெரும்பாலான பிளேட்லெட்டுகளில் வைரஸின் ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறியவில்லை. கொரோனா வைரஸ் உயிரணுக்களுக்குள் மரபணு மாற்றங்களை மறைமுகமாக ஊக்குவிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    University of Utah Health researchers found that Covid causes hyperactivity in blood-clotting cells
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X