வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டொனால்ட் ட்ரம்ப்பை உளவு பார்க்க வெள்ளை மாளிகையை சுற்றி சாதனங்களை நிறுவியதா 'உயிர் தோழன்' இஸ்ரேல்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூத்த ஆலோசகர்களை உளவு பார்க்கும் முயற்சியாக இஸ்ரேலின் உளவுத்துறை, வெள்ளை மாளிகையைச் சுற்றி கண்காணிப்பு சாதனங்களை வைத்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாலிடிகோவின் டேனியல் லிப்மேன் வெளியிட்டுள்ள, இந்த அறிக்கை, இந்த விவகாரத்தில் மூன்று முன்னாள் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டியுள்ளது. அவர்களில் பலர் உயர் உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு பதவிகளில் பணியாற்றியுள்ளனர். இந்த விவகாரம் அவர்களுக்கும் தெரியும் என்று அது கூறியுள்ளது.

Israel planted surveillance devices targeting Donald Trump

பாலிடிகோவின் அறிக்கையின்படி, இஸ்ரேலியர்கள் சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளத்தை (IMSI) பயன்படுத்தியும் உளவு பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள ஸ்டிங்ரேக்கள் மிக உயர்ந்த தொழில் நுட்பங்களைக் கொண்டிருந்தன, மேலும் அவை அதிபர் டிரம்ப், அவரது மூத்த ஆலோசகர்கள் மற்றும் பிற நெருங்கிய கூட்டாளர்களை உளவு பார்க்கும் நோக்கம் கொண்டவை.

இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்ததா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று பொலிடிகோ கூறினார். அமெரிக்காவும், இஸ்ரேலும் நட்பு நாடுகளாக உள்ளவை. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள், ஆயுத கொள்முதல் என பல விஷயங்களில், நகமும், சதையுமாக இருக்கும் நாடுகள். அப்படியிருக்கும்போது, இஸ்ரேல் இதுபோல உளவு கருவிகளை பொருத்தியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The intelligence services of Israel planted surveillance devices around the White House in an attempt to spy on United States President Donald Trump and his senior advisors, according to a report published on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X