வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முதல்முறையாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்வை பார்ப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Nasa SpaceX Launch Aborted | Trump return to Florida

    அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று எலான் மஸ்கின் ஸ்பேக் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ரக ராக்கெட் விண்வெளிக்கு செல்லவிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது.

    2011-ஆம் ஆண்டுக்கு பிறகு ராக்கெட் மூலம் வீரர்களை அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. அதற்கு பதிலாக ரஷ்யாவின் ராக்கெட் மூலம் அனுப்பி வந்தது. இந்த நிலையில் தற்போது தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இரு வீரர்களை அனுப்ப ஆயத்தமானது.

    இஸ்ரோவின் டெக்னிக்.. முதல் தனியார் நிறுவனம்.. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் எலோனின் ஸ்பேஸ் எக்ஸ்! இஸ்ரோவின் டெக்னிக்.. முதல் தனியார் நிறுவனம்.. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் எலோனின் ஸ்பேஸ் எக்ஸ்!

    நாசா அறிவுரை

    நாசா அறிவுரை

    கொரோனா எதிரொலியால் இந்த நிகழ்வை காண யாரும் வீட்டை விட்டு வரவேண்டாம் என்றும் வீட்டுக்குள் இருந்தபடியே டிவியில் கண்டு களிக்கலாம் என்றும் நாசா அறிவுறுத்தியிருந்தது. எனினும் அதிபர் மகள் இவான்கா, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்வை நேரடியாக காண ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சென்றார்.

    கணவர்

    கணவர்

    உடன் அவரது குழந்தைகள், கணவர் ஆகியோரையும் அழைத்து சென்றிருந்தார். எனினும் மோசமான வானிலை காரணமாக ராக்கெட் அனுப்பும் திட்டம் வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாசாவின் அறிவுரையை ஏற்காமல் இவான்கா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வந்தது சமூகவலைதளங்களில் பேச்சுப் பொருளாகிவிட்டது.

    நெட்டிசன்கள் விமர்சனம்

    நெட்டிசன்கள் விமர்சனம்

    இவான்காவின் கணவர் ஜெரேட் மாஸ்க் அணியாமல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொறுப்பு ஏதும் இல்லாமல் இவர் மாஸ்க் அணியாமல் சென்றதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    ட்விட்டரில் கேள்வி

    ட்விட்டரில் கேள்வி

    இவான்காவும் குழந்தைகளும் மாஸ்க் அணிந்துள்ள நிலையில் இவர் மட்டும் ஏன் அணியவில்லை என கேள்வி எழுந்துள்ளது. ஜெரேட் மனிதர்களை போல் கொரோனா வைரஸை பரப்ப மாட்டாரா என இவான்காவிடம் ட்விட்டரில் கேட்கிறார்கள்.

    ஏன் மாஸ்க் அணியவில்லை

    ஏன் மாஸ்க் அணியவில்லை

    இந்த சிறிய குடும்பச் சுற்றுலாவுக்கு வரிசெலுத்துவோராகிய நாங்கள் வரி செலுத்த வேண்டுமா, ஜெரேட் ஏன் மாஸ்க் அணியவில்லை என்கிறார் இந்த வலைஞர்.

    English summary
    Trump's daughter Ivanka Trump went to Space X launch with her husband and children despite Nasa asked people to stay home and watch the launch in live cast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X