வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமேசான் உரிமையாளர் அளித்த ஜீவனாம்சம் 2.50 லட்சம் கோடி.. உலகில் 4-ஆவது பெண் பணக்காரர் ஆன மனைவி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வழங்கியதால் ஜீவனாம்சம் மூலம் உலகில் 4-ஆவது பெண் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் அவரது மனைவி.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் உரிமையாளர் ஜெப் பெசோஸ். இவர் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னர் எழுத்தாளரான மக்கின்சியை காதலித்து 1993-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் 1994-இல் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.

முன்னாள் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினி லாரென் உடனான காதல் தான் இத்தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.

ஓட்டு போட்டா போடு.. போடாட்டி போ.. வணக்கம் வைக்ககூட யோசிக்கும் வேட்பாளர்கள்.. வர வர பயம் போயிருச்சே ஓட்டு போட்டா போடு.. போடாட்டி போ.. வணக்கம் வைக்ககூட யோசிக்கும் வேட்பாளர்கள்.. வர வர பயம் போயிருச்சே

பங்குதாரர்

பங்குதாரர்

அமேசான் நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் அதன் அசுர வளர்ச்சி போன்றவற்றில் கணிசமான பங்கு மக்கின்சிக்கு உண்டு. ஆனால் அவர் பங்குதாரராக இல்லை.

ஜீவானாம்சம்

ஜீவானாம்சம்

ஜெப் பெசோஸுற்கு அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் உள்ளது. அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடியாகும். 25 ஆண்டுகால மண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்ததை அடுத்து தனது மனைவிக்கு ஜீவானாம்சம் தொகையை அறிவித்தார்.

சரி பாதியளவு

சரி பாதியளவு

அமெரிக்க சட்டப்படி ஜெப் பெசோஸுக்கு சொந்தமான சொத்தில் இருந்து பாதியளவு மனைவி மக்கின்சிக்கு வழங்க வேண்டும். அதன்படி 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மனைவிக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் மக்கின்சிக்கிற்கு 68 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி) கிடைத்திருக்க வேண்டும்.

கணவருக்கு விட்டு கொடுத்த மனைவி

ஆனால் மக்கின்சிக்கோ 16 சதவீதத்தில் வெறும் 4 சதவீத பங்குகளை மட்டுமே பெற்று கொள்வதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரும் விவாகரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இது மட்டுமின்றி வாஷிங்டன் போஸ்ட் உள்பட மற்ற நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளை கணவருக்கு விட்டுக் கொடுக்க மக்கின்சி முன் வந்துள்ளார்.

90 நாட்களில்

90 நாட்களில்

இதன் மூலம் மக்கின்சிக்கு ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை சொத்தாக பெற்றுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சொத்து உடன்பாடு கருதப்படுகிறது. இந்த ஜீவனாம்சம் மூலம் உலகின் நான்காவது பெண் பணக்காரர் ஆனார் மக்கின்சிக். இத்தம்பதியினர் இன்னும் 90 நாட்களில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்யவுள்ளனர்.

English summary
Both Amazon founder Jeff Bezos and author MacKenzie Bezos announced their parting in separate posts on Twitter Thursday. Mackenzie becomes 4th richest lady in the world after getting share from Amazon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X