வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டொனால்ட் டிரம்ப் ஒரு இனவெறியர்- ஜோ பிடன் கடும் தாக்கு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அதிபர் டொனால் டிரம்ப் ஒரு இனவெறியர் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்பாக இரு அதிபர்கள் நேருக்கு நேர் மோதும் விவாதம் ஓஹியோவில் நடைபெற்றது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் டிரம்பை ஜோ பிடன் கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவாதத்தில்கொரோனா வைரஸ்,நிறவெறி, இனவெறி, பருவநிலை மாற்றம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு இன உணர்திறன் பயிற்சிகளை தடுக்கும் முயற்சிகள் குறித்து டிரம்பிடம் ஜோபிடன் கேள்வி எழுப்பினார்.

பைடனை சமாளிக்க முடியாத கோபத்தில்.. இந்தியாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப்.. இந்தியர்கள் ஷாக்! பைடனை சமாளிக்க முடியாத கோபத்தில்.. இந்தியாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப்.. இந்தியர்கள் ஷாக்!

இனவெறி

இனவெறி

அதற்கு டிரம்ப் கூறுகையில், இன உணர் திறன் பயிற்சிகள் வெறும் இனவெறியை மட்டுமே தூண்டிவிடும். நம் நாட்டு மக்களை வெறுக்க கற்பிக்கப்படும் என்பதால் அந்த பயிற்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை ஜோ பிடன் நம்புகிறாரா இல்லையா என டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

டிரம்பின் கேள்வி

டிரம்பின் கேள்வி

சட்டம் ஒழுங்கு குறித்து ஜோ பிடன் கவலைப்படுகிறாரா இல்லையா என்பதுதான் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்பின் கேள்வியாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஜோபிடன் கூறுகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு இதுவரை டிரம்ப் செய்தது என்ன. ஒன்றும் கிடையாது. டொனால்ட் டிரம்ப் அனைத்து விஷயங்களையும் இனவெறியாகவே மாற்றுகிறார்.

கடும் மோதல்

கடும் மோதல்

அதிபர், தனது பதவிக் காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு இதுவரை ஒன்றையும் செய்யவில்லை என ஜோபிடன் கூறிய போது இனப் பிரச்சினைகளை யார் கையாள்வது என்பது குறித்து இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதையடுத்து உச்சகட்டமாக டிரம்ப் ஒரு இனவெறியாளர் என ஜோ பிடன் கடுமையாக விமர்சித்தார். மற்ற நாட்டு எதிரிகளுடன் சண்டையிடும் தோல்வி அடையும் அமெரிக்க ராணுவத்தினரை தோல்வியடைந்தவர்கள் என டிரம்ப் விமர்சித்ததாக செய்திகள் வெளியானது குறித்து ஜோ பிடன் கேள்வி எழுப்பினார்.

ஹண்டர் பிடன்

ஹண்டர் பிடன்

மேலும் 2015-ஆம் ஆண்டு மூளை புற்றுநோயால் மறைந்த எனது மகன் பியூ, ஈராக்கில் ஓராண்டு பணியாற்றினார். அவர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார் என ஜோ பிடன் குறிப்பிட்டார். அப்போது டிரம்ப் கேள்வி எழுப்புகையில், ஆமாம், பியூ யார், எனக்கு ஹண்டர் பிடனை மட்டுமே தெரியும் என டிரம்ப் தெரிவித்தார்.

போதை பழக்கம்

போதை பழக்கம்

அதற்கு ஜோ பிடன் ஹண்டர் போல் பல அமெரிக்கர்கள் போதை மருந்து பழக்கத்தால் போராடி வருகிறார்கள். அந்த வகையில் எனது மகன் ஹண்டர் அப்பழக்கத்திலிருந்து விடுபட்டது எனக்கு பெருமை அளிப்பதாக ஜோ பிடன் தெரிவித்தார்.

English summary
Joe Biden accuses Donald Trump is racist in his first debate with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X