வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதுக்கு இன்னும் அழுகுணி ஆட்டம்.. பேசாம ஒத்துக்கிட்டு கிளம்புங்க டிரம்ப்.. பிடன் அட்வைஸ்!

டிரம்புக்கு ஜோ பிடன் அறிவுரை தந்துள்ளார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இப்படியே அழுது புலம்பிட்டு இருந்தால் சரிவராது.. டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று பிடன் அட்வைஸ் தந்துள்ளார்.

அதிபர் தேர்தல் ரிசல்ட் வந்தும் டிரம்ப்பால் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வெளியே வர முடியவில்லை.. தான் தான் அடுத்த அதிபர் என்று கனவிலும் நனவிலும் வாழ்ந்து கொண்டிருந்தவர் டிரம்ப்.. ஆனால் தோல்வியை சந்தித்து விட்டார்.. அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒப்பாரி வைத்து வருகிறார்.

Joe Biden adviced Donald Trump over Election result issue

பிடனின் தேர்தல் வெற்றியை எதிர்த்தும், தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துவிட்டதாகவும் சொல்லி கோர்ட் வரை சென்றார்.. ஆனால் நோஸ் கட் வாங்கி கொண்டு வந்தார். எல்லா மனுக்களையும் கோர்ட் டிஸ்மிஸ் செய்துவிட்டது.

பதவியேற்பு விழாவே 20-ம் தேதி நடக்க போகிறது.. அப்போதும் அடங்காமல் பிடனை குறை சொல்லி கொண்டே இருக்கிறார்.. இதற்குதான் பிடன் ஒரு அட்வைஸ் தந்திருக்கிறார்.. அதில் "டிரம்ப் இனிமேலும் அழுது புலம்பக்கூடாது.. பிரச்சினை குறித்து எதுவுமே செய்யாமல் இப்படியே ட்ரம்ப் அழுது புலம்புவதால் என்ன பலன்?

திமுக அடிச்ச திமுக அடிச்ச "ஸ்கோர்'.. மாணவர்கள் வயிற்றில் லிட்டர் கணக்கில் பால்.. அதிமுக மிஸ் பண்ணிருச்சே!

மற்றவர்கள் பற்றி குறை பேசியே வருகிறார்.. எதுக்கு இவருக்கு இந்த வேண்டாத வேலை.. அவருக்கு வேலை செய்யவே இஷ்டம் இல்லை.. இந்த நாட்டை டிரம்ப் எந்த அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார் என்று எனக்கு தெரியும்... இந்த நாட்டுக்காக அவர் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இவ்வளவு சொல்லியும் எப்படியும் டிரம்ப் அடங்க போவதில்லை.. எதையாவது பேசி மறுபடியும் வம்பில் மாட்ட தான் போகிறார் என்கிறார்கள்.. இன்னும் 15 நாள்தான் இருக்கிறது அதிபர் பதவி ஏற்கும் விழாவுக்கு.. அன்னைக்கு என்னவெல்லாம் செய்ய போகிறாரோ, அந்த காட்சியை எப்படியெல்லாம் தாங்க போகிறாரோ தெரியவில்லை..!

English summary
Joe Biden adviced Donald Trump over Election result issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X