வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‘எச்1 பி' விசா வழங்குவதில்... டிசம்பர வரை குலுக்கல் முறையே தொடரும்... ஜோ பைடன் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எச்1 பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் அறிவித்த்துள்ளது.

முன்னாள் அதிபர் டிரம்ப், 'எச்1 பி' விசா நடைமுறையில் குலுக்கல் முறையை மாற்றி, விண்ணப்பிப்போரின் தகுதிக்கேற்ப மதிப்பெண் அடிப்படையில், விசா வழங்குவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Joe Biden announced tthe shake-up in the issuance of H1B visas will continue until December 31 this year

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா 'எச்1 பி' விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை அதிக அளவில் இந்தியர்கள் பெற்று வருகின்றனர். ஐ.டி. துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

''நீதிமன்றம் மூலம் அடித்தட்டு மக்களுக்கும் விரைவாக நீதி கிடைக்கணும்''... பிரதமர் மோடி சொல்கிறார்!''நீதிமன்றம் மூலம் அடித்தட்டு மக்களுக்கும் விரைவாக நீதி கிடைக்கணும்''... பிரதமர் மோடி சொல்கிறார்!

ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்வதால் குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது. அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் 'எச்1 பி' விசா நடைமுறையில் குலுக்கல் முறையை மாற்றி, விண்ணப்பிப்போரின் தகுதிக்கேற்ப மதிப்பெண் அடிப்படையில், விசா வழங்குவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.‌

இந்த உத்தரவு வரும் மார்ச் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில் புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் எச்1 பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என அறிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

English summary
The administration of US President Joe Biden has announced that the shake-up in the issuance of H1B visas will continue until December 31 this year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X