வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை தடுக்க.. முதலில் நீங்கள் பாதாள அறையிலிருந்து வெளியே வாருங்கள்.. டிரம்பை கிண்டலடித்த ஜோ!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை செய்ய வேண்டும். அதற்கு அவர் பாதாள அறையிலிருந்து வெளியே வர வேண்டும் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் அதிகாரி கழுத்தில் மிதித்து கொன்றதை கண்டித்து கருப்பின மக்கள் வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய போது டிரம்ப் பாதாள அறையில் மறைந்து கொண்டதையே ஜோ பிடன் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

Joe Biden asks Trump to come out from Bunker

இரு அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான ஜோபிடன் தனது விவாதத்தில் பாதாளத்திலிருந்தும், கோல்ஃப் விளையாடும் இடத்திலிருந்தும் வெளியே வாருங்கள். அதிபர் அலுவலகத்திற்கு சென்று கொரோனாவால் இறந்த உயிர்களை காக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைத்து கட்சியினருடனும் ஆலோசனை செய்யுங்கள்.

கொரோனா ஈஸ்டர் பண்டிகையின் போது ஓடிவிடும் என சொன்னவர் இவர்தானே (டிரம்ப்)? ஒரு வேளை கிருமி நாசினியை ஊசி மூலம் செலுத்திக் கொண்டீர்களா? இந்த கோமாளி (டிரம்ப்) என்ன செய்கிறார் என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் தெரியுமா. நான் உங்களுக்கு (மக்களுக்கு) ஒன்று சொல்கிறேன், அனைவருக்கும் சுகாதாரம், மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என நினைப்பவர் டிரம்ப் இல்லை.

Shut up man!... ட்ரம்ப் பொய்களால் கடுப்பாகி ஆக்ரோஷம் காட்டிய ஜோ பிடன் Shut up man!... ட்ரம்ப் பொய்களால் கடுப்பாகி ஆக்ரோஷம் காட்டிய ஜோ பிடன்

அமெரிக்காவின் மோசமான அதிபர் நீங்கள்தான். இதுவரை உங்களை போன்ற ஒருவரை நான் பார்த்ததே இல்லை. 1000 ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் ஒருவர் கொரோனாவால் இறக்கிறார்கள். கொரோனாவை தடுக்க டிரம்ப் ஏதேனும் செய்யத் தவறினால் இறப்பு விகிதம் 500 பேரில் ஒருவர் என்றாகிவிடும் என்றார்.

அதற்கு டிரம்ப் கூறுகையில் கருப்பின மக்கள் தற்போதுதான் சுதந்திரமாக உள்ளார்கள். கருப்பின மக்களை ஜோபிடன் நடத்தியது போல் இந்த நாட்டில் வேறு யாரும் நடத்தியதில்லை என்றார். அப்போது நடுநிலையாளர் டிரம்பிடம் பருவநிலை மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்.

அதற்கு டிரம்ப் என்னை பொருத்தவரை அமெரிக்க மக்களுக்கு சுத்தமான தண்ணீரும், நல்ல காற்றும் தேவை. நாங்கள் இவற்றை தனித்தனி துறைகளை கொண்டு சிறப்பாக செய்து வருகிறேன். கலிபோர்னியா தீவிபத்து கவலைக்குரியது. சிறந்த வன மேம்பாடு அவசியமாகிறது என்றார் டிரம்ப்.

இந்த அதிபர் டிரம்பால் நாம் மிகவும் வலிவிழந்துவிட்டோம், நோயாளியாகிவிட்டோம், ஏழையாகிவிட்டோம், பிரித்தாளும் நிலைக்கு தள்ளப்பட்டு வன்முறையில் ஈடுபடும் நிலை வந்துள்ளது, பள்ளி ஆசிரியரை விட மிகவும் குறைந்த வருமான வரியையே டிரம்ப் செலுத்தியுள்ளார். தான் புத்திசாலி என கூறிக் கொள்ளும் டிரம்ப் வரி ஏய்ப்பு செய்ததாலேயே அப்படி கூறுகிறார்.

டிரம்ப் வரி ஏய்ப்பு செய்த பணத்தை கொண்டு இல்லாதோருக்கு உதவியிருக்கலாம் என்றார் ஜோபிடன். அப்போது குறுக்கிட்ட டொனால்ட் டிரம்ப், 25 ஆண்டுகளாக நீங்கள் ஏன் மக்களுக்கு நன்மை செய்யவில்லை, நான் ஒன்று கூறுகிறேன் ஜோ, 47 ஆண்டுகளில் நீங்கள் செய்யாததை நான் 47 மாதங்களிலேயே செய்துவிட்டேன் என்றார் டிரம்ப்.

ஜோபிடன் பேசுகையில் தேர்தல் எந்த முறைகேடுமின்றி நடைபெறவும் மக்கள் அமைதியாக வாக்களிக்கவும் அமெரிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அது இ மெயில் மூலமாக இருந்தாலும் சரி, வாக்குச் சாவடிகளாக இருந்தாலும் சரி மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது உங்களுக்கு (மக்கள்) தெரியும். எனவே வாக்களியுங்கள். எந்த முறை உங்களுக்கு சிறந்தது என கருதுகிறீர்களோ அந்த வழியில் வாக்களியுங்கள் என்றார் ஜோ பிடன்.

English summary
Joe Biden asks Trump to come out from Bunker to save the life of Americans in coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X