வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கள் ஒரு கோமாளி... வாயை மூடுங்கள்... இனவெறியாளர்... ட்ரம்ப்பை விளாசிய ஜோ பைடன்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பொய்யர் என்று மட்டும் கூறவில்லை, அதிபருக்கான போட்டி வேட்பாளரான ஜோ பைடன். ட்ரம்ப் ஒரு 'கோமாளி' என்றும் கூறி அரங்கையே திகைக்க வைத்தார். ட்ரம்ப் ஒரு இனவெறி பிடித்தவர் என்று பைடன் தொடர்ந்து அதிரடியாக பேசி அமெரிக்க அதிபர் தேர்தலில் சூட்டை கிளப்பி இருக்கிறார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். துணை அதிபராக மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பைடனும் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

தோற்றாலும் பதவி விலக மாட்டாராம் ட்ரம்ப்.. களேபரம் உறுதி! தோற்றாலும் பதவி விலக மாட்டாராம் ட்ரம்ப்.. களேபரம் உறுதி!

விவாதம்

விவாதம்

இதுவரை தனித்தனியாக தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை இருவருக்கும் இடையே பாக்ஸ் நியூஸ் டிவி சேனல் நேரலையில் முதன் முறையாக நேரடி விவாதம் நடைபெற்றது. அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இனவெறி

இனவெறி

விவாதத்தில் ஜோ பைடன் பேசுகையில், ''அமைதியாக சத்தமே இல்லாமல் கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்தான் ட்ரம்ப். ஆப்ரிக்க-அமெரிக்க மக்களுக்கு இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவில்லை. அவர்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை. இனவெறி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கறுப்பு இனத்தவர்களை கடுமையாக விமர்சித்தவர்தான் இவர். அவர்கள் மீது அடக்குமுறைகளை கையாண்டார். இவர் அதிபராக இருந்தபோது அவர்களுக்கு என்று என்ன செய்து இருக்கிறார்'' என்று அடுக்கிக் கொண்டே சென்றார்.

வாயை மூடுங்கள்

வாயை மூடுங்கள்

ஒரு கட்டத்தில் பைடன் கோபத்தின் உச்சிக்கே சென்று அந்த மனிதரின் வாயில் இருந்து எதையுமே வாங்க முடியாது. அவர் ஒரு கோமாளி. இவ்வாறு கூறுவதற்கு என்னை மன்னித்து விடுங்கள்'' என்று பேசிக் கொண்டே இருந்தார். நீங்கள் முதலில் வாயை மூடுங்கள் என்று காரசாரமாக பைடன் கூறியபோது அரங்கமே அமைதியானது.

கை குலுக்கல்

கை குலுக்கல்

இந்த நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதற்கு வந்த ட்ரம்ப் மற்றும் பைடன் இருவரும் அரங்கத்திற்குள் நுழையும்போது, எப்படி இருக்கிறீர்கள் என்று கை குலுக்குவதற்கு ட்ரம்ப்பை நோக்கி பைடன் சென்றார். ஆனால், கை குலுக்கக் கூடாது என்று நெறியாளர் மறுப்பு தெரிவித்தார். இருவருமே விவாதத்தின் போது மாஸ்க் அணியவில்லை.

மெலினியா

மெலினியா

இந்த அரங்கத்தில் ட்ரம்ப் மற்றும் பைடன் குடும்ப உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள் என்று 80 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் ட்ரம்ப் மனைவி மெலினியா ட்ரம்ப், மகன் எரிக், மகள் இவாங்கா மற்றும் பைடனின் மனைவி ஜில் ஆவர்.

வயது

வயது

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது 77. டொனால்ட் ட்ரம்ப் வயது 74. முந்தைய ஆட்சியில் பாரக் ஒபாமாவின் கீழ் துணை அதிபராக இருந்தவர்தான் ஜோ பைடன்.

English summary
Joe Biden Calls Trump A "Clown" During US Presidential Debate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X