வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்ப் விமானம் ஒதுக்காததன் எதிரொலி... பதவியேற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பிடன்..!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடனுக்கு டிரம்ப் விமானம் ஒதுக்காமல் அவமரியாதை செய்ததால், வாடகை விமானத்தை பிடித்து வாஷிங்க்டன் டி.சி.வந்தடைந்தார் ஜோ பிடன்.

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நபருக்கு முறைப்படி விமானம் அனுப்பி வைப்பதை இதற்கு முந்தைய அதிபர்கள் பின்பற்றி வந்தார்கள். ஆனால் டிரம்ப் எல்லாவற்றிலும் மாறுபட்ட மனிதராக தன்னை உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்.

Joe Biden came on a charter flight to take charge

ஜோ பிடனை அவமதிக்கும் வகையில் டிரம்ப் நடந்துகொண்ட விதத்திற்கு குடியரசுக் கட்சியினரே அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். டிரம்ப் அரசாங்க விமானத்தை முறைப்படி ஜோ பிடனுக்கு அனுப்பாததால் சொந்த நிதியில் விமானத்தை வாடகை அமர்த்தி பதவியேற்பு விழா நடைபெறும் வாஷிங்க்டன் டிசி வந்தடைந்தார் பிடன்.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா என்ற சொல்லாடல் ஒன்று நமது ஊரில் உள்ளது. அதேபோல் தாம் விமானம் அனுப்பவில்லை என்றால் ஜோ பிடனால் பதவியேற்கவே முடியாது என நினைத்துவிட்டார் போல் டிரம்ப்.

எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத அதிபர் நான் தான்... பிரிவு உபச்சார விழாவில் டிரம்ப் பேச்சு..! எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத அதிபர் நான் தான்... பிரிவு உபச்சார விழாவில் டிரம்ப் பேச்சு..!

இதனிடையே ஜோ பிடன் வாஷிங்டன் டிசி தரையிறங்கிய நேரம் பார்த்து டிரம்பின் பிரிவு உபச்சார விழா வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த விழாவில் மருந்துக்கு கூட பிடன் பெயரை உச்சரிக்காமல் அவமதித்துள்ளார் டிரம்ப்.

இதன் மூலம் டிரம்ப்பின் மனதில் உள்ள வக்கிரமும், சகிப்புத்தன்மையற்ற குணமும் அமெரிக்க மக்களால் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள மக்களால் விமர்சிக்கப்படுகிறது.

English summary
Joe Biden came on a charter flight to take charge
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X