• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மியான்மரில் 114 பேர் சுட்டுக்கொலை : ராணுவத்தாக்குதல் மூர்க்கத்தனமானது - ஜோ பைடன் கண்டனம்

|

வாஷிங்டன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மர் ராணுவத்தின் செயல் முற்றிலும் மூர்க்கத்தனமானது என்றும் மிகவும் மோசமானது என்றும் பைடன் கூறியுள்ளார்.

மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சிக்கு எதிராக போராடுபவர்களை அடக்க அந்நாட்டு ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் ரத்த ஆறு ஓடுகிறது. மக்கள் தினசரியும் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Joe Biden condemns Myanmar bloodshed absolutely outrageous

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆட்சியமைக்க தேவையான 322க்கும் அதிகமான இடங்களில் வென்று மீண்டும் ஜனநாயக தேசிய லீக் ஆட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராணுவம் குற்றம் சாட்டியது. திடீரென ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் அதிரடியாக கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் பிரிவு 417-ன் கீழ் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக ராணுவத்துக்கு சொந்தமான மியாவாடி தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியானது. மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க ஒரு வருட காலத்துக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. மியான்மர் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டு வருகிறது.

மியான்மர் ராணுவம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. இதையொட்டி அரசு டிவியில் உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுட படுவார்கள் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

ராணுவ தலைவரின் எச்சரிக்கையையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் வழக்கம் போல் வீதிகளில் இறங்கிப் போராடினர்.‌ அந்த நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உட்பட 40 இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.‌

அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்து போராட்டத்தை நசுக்குவதற்கு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.‌ மிகவும் ஆக்ரோஷமாகவும் கண்மூடித் தனமாகவும் குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர் ராணுவ வீரர்கள் இதில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மியான்மர் ராணுவத்தை கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். ஐரோப்பிய கூட்டமைப்பும், ஐ.நா. பொதுச்சபையும் மியான்மார் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டித்தன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெலாவேர் மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மர் ராணுவத்தின் செயல் முற்றிலும் மூர்க்கத்தனமானது. மிகவும் மோசமானது. எனக்கு கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், ஏராளமான மக்கள் முற்றிலும் தேவையில்லாமல் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

English summary
US President Joe Biden has condemned the shooting deaths of 114 people who fought against military rule in Myanmar in a single day. Biden said the Myanmar military's actions were "absolutely outrageous" and "very bad."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X