வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனவெறி எதிர்ப்பு...பெற்றோரின் பங்கெடுப்பு...அமெரிக்காவில் இன்றும் தொடருகிறது...கமலா ஹாரிஸ் விளாசல்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான தேர்தல் நவம்பரில் நடக்கிறது. இதற்கான பரப்புரையை ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபருக்கு போட்டியிடும் ஜோ பைடன் மற்றும் துணை அதிபருக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் இருவரும் பரப்புரையை துவக்கினார். இருவரும் இணைந்து நடத்திய முதல் பரப்புரையில் அதிபர் டொனால்ட் டிரம்பை விளாசினர். அமெரிக்காவில் இன்றும் இனவெறி தொடருகிறது என்று கமலா ஹாரிஸ் வருத்தம் தெரிவித்தார்.

Recommended Video

    Trump-ஐ விளாசிய Joe Biden-Kamala Harris | First Campaign | Oneindia Tamil

    அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபருக்கான போட்டியில் ஜோ பைடனும், துணை அதிபருக்கான போட்டியில் கமலா ஹாரிஸ் நிற்கின்றனர். கமலா ஹாரிஸ் இந்திய வம்சா வழி தமிழ் பெண். இவரது தாய் சியாமளா கோபாலன் அமெரிக்காவில் புற்று நோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர். தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்த கறுப்பர். பொருளாதார பேராசிரியராக பணியாற்றியவர்.

    கமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை கமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை

    பெண் அதிபர் இல்லை

    பெண் அதிபர் இல்லை

    இவர்களுக்குப் பிறந்த கமலா ஹாரிஸ் இன்று அமெரிக்காவில் துணை அதிபருக்கு போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் சரித்தத்தில் இவரது பெயர் பதியப்படும். இதுவரைக்கும் அமெரிக்காவில் பெண்கள் அதிபர் மற்றும் பெண் துணை அதிபருக்கான போட்டியில் வென்றது இல்லை. ஆனால், போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளனர்.

    இந்திய வம்சாவளி

    இந்திய வம்சாவளி

    இங்கு கமலா ஹாரிஸ் இந்தியராக, மறுபக்கம் கறுப்பர் இனத்தின் அடையாளமாக தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை பெண் ஒபாமா என்று அழைப்பதும் உண்டு. அந்தளவிற்கு பேச்சு திறனில் சல்லவர். சட்ட நுணுக்கங்களில் வல்லவர். சான் பிரான்சிஸ்கோவின் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றியவர். இவர் ஜனநாயகக் கட்சியில் சார்பில் போட்டியிடுவது அந்தக் கட்சிக்குத்தான் சாதகம். ஆதலால்தான் அவரை ஜோ பைடன் தேர்வு செய்து இருக்கிறார்.

    ஜார்ஜ் ஃபிளாய்ட்

    ஜார்ஜ் ஃபிளாய்ட்

    அமெரிக்காவில் தற்போது நிற பாகுபாடு கடுமையாக தலைதூக்கியுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீசாரின் கரங்களாலும், கால்களாலும் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது பெரிய அளவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. கமலா கறுப்பர் இன பெண் என்பதால் இவரது தேர்வு இங்கு சரியாக இருக்கும் என்று ஜோ முடிவு செய்தார்.

    நமஸ்தே ட்ரம்ப்

    நமஸ்தே ட்ரம்ப்

    மற்றொன்று, டொனால்ட் ட்ரம்பக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளிகளின் ஆதரவு தேவை என்பதால், அவர் பிரதமர் மோடியை அழைத்துச் சென்று ஹவுடி மோடி நிகழ்ச்சியை நடத்தினார். பதிலுக்கு மோடியும் அகமதாபாத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை நடத்தினார். இதையும் சத்தம் இல்லாமல் கமலா ஹாரிஸ் தேர்வு மூலம் உடைத்தார் ஜோ. இந்த இரண்டு பலன்களையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜோ முடிவு செய்ததன் பலன்தான் கமலா ஹாரிஸ் தேர்வு. இருவரும் இணைந்தே தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினால், அனல் பறக்கும் என்பது ஜோவின் எண்ணம்.

    பேச்சில் வல்லவர்

    பேச்சில் வல்லவர்

    ''எனது தாய், எனக்கும் எனது சகோதரிக்கு கற்றுக் கொடுத்தது, பிரச்னையை என்னிடம் கொண்டு வர வேண்டாம். நீங்களே தீர்வு காணுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார் '' என்று பிரமாதமாக தன்னுடைய பேச்சை துவக்குபவர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவைப் போலவே இவரும் பேச்சில் வல்லவர்.

    முதல் மேடை

    முதல் மேடை

    ஜோ, கமலா இருவரும் ராயல் புளூ நிறத்தில் ஆடைகளை ஒரே மாதிரி அணிந்து கொண்டனர். மாஸ்க் அணிந்து கொண்டனர். விள்மிங்டன் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருவரும் ஏறினர். கமலாவை தேர்வு செய்த பின்னர் இருவரும் சேர்ந்து ஏறும் முதல் மேடை.

    சாலைகளில் ரத்த வெள்ளம்

    சாலைகளில் ரத்த வெள்ளம்

    முதலில் ஜோ பேசத் தொடங்கினார். ''மோசமான, இடதுசாரி வெறியாளர் (ட்ரம்பை தாக்கிப் பேசினார்). ஒட்டு மொத்த தேசமாக நாம் யார்? எதற்காக நாம் இங்கே நிற்கிறோம்? நாம் என்னவாக இருக்க விரும்புகிறோம்? நாட்டில் இனவெறி உச்சத்தை தொட்டு இருப்பதற்கு காரணம் ட்ரம்ப்தான். ஜார்ஜ் பிளாய்ட் மரணம் இவரால்தான் ஏற்பட்டது. ஜெர்மன் நாட்டில் ஹிட்லர் இருக்கும்போது என்ன நடந்ததோ அதேதான் தற்போதும் நடந்து வருகிறது. சாலைகளில் ரத்த வெள்ளம் ஓடுகிறது. ஹிட்லர் இருக்கும்போது என்ன நடந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களோ அதேதான் தற்போதும் அங்கு நடந்து வருகிறது. ட்ரம்ப்புக்கு வலிமையான பெண்ணுடன் பிரச்சனைகள் இருக்கிறது நீங்கள் நம்புகிறீர்களா?

    நாட்டின் வளர்ச்சி

    நாட்டின் வளர்ச்சி

    நான் ஏன் கமலாவை தேர்வு செய்தேன் என்றால், சிறு வயதில் அமெரிக்காவில் குடியேறிய அவருக்குத் தெரியும் இங்கு குடியேறி இருக்கும். மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டு இருக்கிறார்கள் என்று. இந்த தேர்தல் பிரச்சாரம் முழுவதும் என்னுடன் கமலா இருப்பார்'' என்றார்.

    பராக் ஒபாமா புகழாராம்

    பராக் ஒபாமா புகழாராம்

    பிரச்சாரத்தில் கமலா பேசுகையில், ''நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு சிறப்பான முறையில் ட்ரம்ப் பணியாற்றவில்லை. பாரக் ஒபாமா அதிபராக இருந்தபோது எபோலா வைரஸ் பரவியது. இருவர்தான் இறந்தனர். அந்தளவிற்கு அந்த நோயை அவர் கட்டுப்படுத்தினார். ஆனால், இன்று ஆயிரக்கணக்கில் இறந்து வருகின்றனர். பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் சிதைத்துள்ளர். ஒபாமா பொருளாதாரத்தை நாட்டில் மிகவும் ஸ்திரமாக, விரிவாக்கம் செய்து வைத்து இருந்தார்.

    English summary
    Joe Biden Kamala Harris campaigned against Donald Trump called him leftwing fanatic
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X