வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான இணை அமைச்சர் என்ற முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியரை நியமித்துள்ளார் அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பிடன்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்பை வீழ்த்து வெற்றி பெற்றார் ஜோ பிடன். டிரம்ப் விசாவில் தொடங்கி வேலைவாய்ப்பு என இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்தார்.

Joe Biden nominates Indian American to key state department

ஆனால் ஜோ பிடனோ இந்தியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது அங்குள்ள இந்தியர்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் பெற்ற வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவர் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

தற்போது அமைச்சரவையை அவர் நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான இணை அமைச்சராக அமெரிக்க வாழ் இந்தியரான உஸ்ரா ஜேயாவை ஜோ பிடன் நியமித்துள்ளார்.

போரை விடவும் கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்கா, இங்கிலாந்து.. எங்கும் மரண ஓலம் போரை விடவும் கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்கா, இங்கிலாந்து.. எங்கும் மரண ஓலம்

முக்கிய பதவியை பெற்ற உஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்பின் கொள்ளைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பாரீஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதராக இருந்தவர்.

அது போல் துணை அமைச்சர் பதவிக்கு வென்டி ஷெர்மேனையும் நிர்வாகம் மற்றும் வளங்கள் துறையின் துணை அமைச்சராக பிரியன் மெக்கியானையும் ஆயுத கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் இணை அமைச்சராக போன்னி ஜென்கின்ஸையும் அரசியல் விவகாரங்கள் துறை இணை அமைச்சராக விக்டோரியா நுலாண்டையும் ஜோபிடன் நியமனம் செய்துள்ளார்.

English summary
US President elect Joe Biden nominates Indian American to key state department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X