வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கர்களுக்கு கொரோனா வாக்சின் கட்டாயமில்லை... ஜோபிடன் அதிரடி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வாக்சின் போட்டு கொள்ளுமாறு மக்களை கட்டாயபடுத்த மாட்டேன் என்று அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன் தெரிவித்தார்.

முகமூடிகளை 100 நாட்கள் அணியுங்கள் என மக்களிடம் கேட்க போகிறேன் என அவர் மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் ஜனவரி 20-ல் பதவிஏற்க உள்ளார்.

Joe Biden said corona vaccine is not mandatory in the United States

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் அதிபராகவும், இந்திய வம்சாவளியான தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
பதவி ஏற்பதற்கு முன்பாகவே நாட்டில் அதிகமாக இருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பிடன் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

கோவாக்சின் தடுப்பு மருந்து போட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா வைரஸ்கோவாக்சின் தடுப்பு மருந்து போட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா வைரஸ்

இந்த நிலையில் வில்மிங்டனில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பிடன் கூறியதாவது:-
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் தடுப்பூசியை போட்டு கொள்ளுமாறு மக்களை கட்டாயபடுத்த மாட்டேன். தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு குறித்த அம்சங்களை வெளிக்காட்ட பொதுவெளியில் தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்.

ஒரு அதிபராக எனது அதிகாரத்தில் உள்ள எல்லாவற்றையும் செய்வேன், மக்களை சரியானதைச் செய்ய ஊக்குவிப்பேன். அவர்கள் அதைச் செய்யும்போது, ​​அது முக்கியமானது என்பது அவர்களுக்கு தெரியும். எனது தொடக்க உரையில் 100 நாட்கள் முகமூடி அணியுமாறு மக்களிடம் கேட்கப் போகிறேன். ஏனெனில் இது தண்டனையும் அல்ல. அரசியல் பிரச்சினையும் அல்ல. இவ்வாறு ஜோ பிடன் கூறினார்.

English summary
US President-elect Joe Biden has said he will not force the people to get the corona vaccine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X