வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க - இந்திய உறவு... போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே பயன்படுத்தினார் ட்ரம்ப்- ஜோ பிடன் புகார்

வாஷிங்டன்: அமெரிக்க - இந்திய உறவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே டிரம்ப் பயன்படுத்தினார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க - இந்திய உறவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே டிரம்ப் பயன்படுத்தினார். நான் காரியங்களை செய்து முடிப்பேன் என்று ஜோ பிடன் கூறியுள்ளார். நாம் இயற்கையான கூட்டாளிகள். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம் என்றும் எழுதியுள்ளார் ஜோ பிடன்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் ட்ரம்பும் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடனும்
பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் ட்ரம்ப்பும் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் நேற்று நடத்திய நேருக்கு நேர் விவாதத்தில் அனல் பறந்தது. இந்தியாவிற்கு வந்து மோடியுடன் கரம் கோர்த்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த ட்ரம்ப், காற்று மாசு பற்றி பேசும் போது சீனாவைப் பாருங்கள் எவ்வளவு தூய்மையற்ற நாடு. ரஷ்யாவை பாருங்கள், இந்தியாவை பாருங்கள். அவர்களின் காற்று மிகவும் மாசு அடைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடக்கம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடக்கம்

இந்தியர்களை கவரும் ஜோ பிடன்

இந்தியர்களை கவரும் ஜோ பிடன்

அமெரிக்காவில் இந்தியர்களுக்காக வெளியாகும் வெஸ்ட் இந்தியா பத்திரிகையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் , 2008ஆம் ஆண்டில் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராக, வரலாற்று சிறப்பு மிக்க இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பங்கு வகித்தேன்.

நட்பு நாடுகள்

நட்பு நாடுகள்

அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டால், உலகம் பாதுகாப்பான இடமாக இருக்கும் என அப்போது கூறினேன். ஒபாமாவின் 2009-2016 பதவிக்காலம் இரு நாடுகளுக்கிடையில் சிறந்த ஆண்டுகளாகும். நானும் இந்திய வம்சாவளி துணை அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரீஸும் அதனை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைதி ஸ்திரத்தன்மை

அமைதி ஸ்திரத்தன்மை

நாம் இயற்கையான கூட்டாளிகள். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம். சீனா அதன் அண்டை நாடுகளை அச்சுறுத்தாத வகையில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார் ஜோ பிடன்.

சமத்துவம் மத சுதந்திரம்

சமத்துவம் மத சுதந்திரம்

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள், சமத்துவம், கருத்து மற்றும் மத சுதந்திரம் இது போன்று எண்ணற்ற வலிமையை இரு நாடுகளும் நமது பன்முகத்தன்மையிலிருந்து பெறுகின்றன. இந்த அடிப்படை கொள்கைகள் ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளிலும் நீடித்திருக்கின்றன. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று எழுதியுள்ளார் ஜே பிடன்.

இந்தியா அமெரிக்கா உறவு

இந்தியா அமெரிக்கா உறவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் 20 லட்சம் இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த எண்ணிக்கை குறிப்பிட்ட சில மாநிலங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும் என இரு கட்சியின் அதிபர் வேட்பாளர்களும் கணித்துள்ளனர். இதனால் இந்திய - அமெரிக்க உறவு பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர். கருத்துக்கணிப்பிலோ இந்திய அமெரிக்க உறவுக்கு அமெரிக்க இந்தியர்கள் கடைசி இடமே தந்துள்ளனர். கொரோனா காலத்தில் நல்ல மருத்துவ வசதியும், சுகாதார வசதியுமே தேவை என்பது அமெரிக்க வாழ் இந்தியர்களின் விருப்பமாகும்.

English summary
Democratic presidential candidate Joe Biden has said that while US-India ties were “photo-ops” for President Donald Trump, for him they were about getting things done, and reiterated his promise to work with India to combat terrorism and prevent China from threatening its neighbours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X