வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவை இழிவாக பேசிய டிரம்ப்.. நம் நண்பரை இப்படித்தான் பேசுவீங்களா.. கொதித்தெழுந்த பீடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவை இழிவாக பேசிய அதிபர் டிரம்ப்பை, அமெரிக்காவில் எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவுடனான நட்புறவை நானும், கமலா ஹாரிசும் ஆழமாக மதிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது, ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் பிரதான பிரச்சனையாக கொரோனா வைரஸ் தொற்று நோய் இருக்கிறது. அதன்பிறகு வேலை வாய்ப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவையும் விவாதப்பொருளாக அமெரிக்காவில் உள்ளது.

டிரம்ப் பேச்சு

டிரம்ப் பேச்சு

இந்நிலையில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், இந்தியாவை இழிவாக பேசினார். தேர்தல் விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷியாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது என்றார்.

காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் கேள்வி

டிரம்பின் இந்த கருத்து இந்தியர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நோக்கத்துடன் இதை டிரம்ப் தெரிவித்து இருப்பதாக கருதுகிறார்கள்.. நட்பு நாட்டை அவதூறாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள். .கடந்த விவாதத்தின் போதும் டிரம்ப் இந்தியாவை அவதூறாக பேசினார். டிரம்பின் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. , இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே உள்ள தோழைமை இதுதானா என்று பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

உங்களுக்கு தெரியவில்லை

உங்களுக்கு தெரியவில்லை

இதற்கிடைய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், காற்று மாசுபாடு குறித்து இந்தியாவை பற்றிய இழிவாக பேசிய டிரம்ப்பை ட்விட்டரில் கண்டித்துள்ளார்.
"அதிபர் டிரம்ப் இந்தியாவை 'இழிந்தவர்' என்று அழைத்தீர்கள். நண்பர்களைப் பற்றி உங்களுக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை என்பதும், காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எப்படி தீர்ப்பது என்பதும் உங்களுக்கு தெரியவில்லை என்பதும் இதன் மூலம் தெரிகிறது "என்று பீடன் கூறினார்,

இந்திய நட்புறவு

இந்திய நட்புறவு

மேலும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தனது ட்விட்டரில், "கமலா ஹாரிஸும் நானும் நம் கூட்டாட்சியை மிகவும் மதிக்கிறோம், நம் வெளியுறவுக் கொள்கையில் ஆழமான மரியாதை செலுத்துவோம். இந்தியாவுடனான நட்புறவை நானும், கமலா ஹாரிசும் ஆழமாக மதிக்கிறோம்,,

சிறப்பான உறவு

சிறப்பான உறவு

ஒபாமா-பிடென் காலத்தில் இந்தியா அமெரிக்கா இடையே உறவு சிறப்பாக இருந்தது. பிடன்-ஹாரிஸ் நிர்வாகத்திலும் இதற்கான பெரிய முன்னேற்றம் ஏற்படும். பல்வேறு ஒத்துழைப்புகள் உள்ளதால் இயற்கையாகவே நமது கூட்டளியாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து வகைகளிலும் ஒன்றிணைந்து சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுகிறது. நம்முடைய நெருங்கிய நட்பு நாடு.

நடுத்தர வர்க்கத்தை வளர்ப்போம்

நடுத்தர வர்க்கத்தை வளர்ப்போம்

நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் சந்தைகளையும் திறந்து அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடுத்தர வர்க்கத்தை வளர்ப்போம், மேலும் காலநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம், நாடு கடந்த பயங்கரவாதம் மற்றும் அணு பெருக்கம் போன்ற பிற சர்வதேச சவால்களை ஒன்றாக எதிர்கொள்வோம்" இவ்வாறு கூறினார்.

English summary
Democratic Party’s presidential nominee Joe Biden on Saturday slammed President Donald Trump for his comment on India’s air pollution. Biden said that he and his running mate Kamala Harris deeply value America’s partnership with India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X