வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறு வயதில் திக்கிப்பேசிய ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராக மிக நீண்ட உரையாற்றுகிறார்

சிறுவயதில் திக்கி திக்கி பேசியவர் ஜோ பிடன். சொந்த வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தாலும் அதை சாதனைகளாக மாற்றி இன்றைக்கு அமெரிக்க அதிபராக மிக நீண்ட உரையாற்றுகிறார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் வரலாற்றில் இன்று பொன்னான நாள். அந்த நாட்டின் 46வது அதிபராக இன்று ஜோ பிடன் பதவியேற்பதால் வாஷிங்டன் நகரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதில் அதிபராக பதவியேற்கப் போகும் ஜோ பிடன் தன் வாழ்க்கையில் மிக அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவர். சிறு வயதில் திக்கிப் பேசும் குறைபாடுடையவராக இருந்தாலும் அதை சமாளித்து இன்றைக்கு நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்துள்ளார்.

பல மனிதர்கள் கல் தடுக்குவதற்கு எல்லாம் நேரத்தை குறை சொல்வார்கள். தடுக்கி விட்ட கல்லைக் கூட படிக்கல்லாக மாற்றி சாதித்தவர்கள் ஒரு சிலர்தான்.

 தமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

அமெரிக்க அதிபராக இன்றைக்கு இரவு இந்திய நேரப்படி 10 மணிக்கு பதவியேற்கப் போகும் ஜோ பிடன் தன்னை தடுக்கி விட்ட கற்களை படிக்கற்களாக மாற்றி வெற்றி பெற்றவர்தான் என்பது பலர் தெரிந்திருக்க நியாயமில்லை.

46வது அதிபர் ஜோ பிடன்

46வது அதிபர் ஜோ பிடன்

கொரோனா பரவலுக்கு இடையில் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் தற்போதைய அதிபராவார் . அவர் அமெரிக்காவின் 46 வது அதிபராகப் புதன் கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.

துணை அதிபர் கமலா ஹாரிஸ்

துணை அதிபர் கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்திய பாரம்பரிய முறைப்படி இருவரையும் வண்ண வண்ண கோலங்களை காட்சிப்படுத்தி வரவேற்க உள்ளனர்.

வண்ண மயமான வெள்ளை மாளிகை

வண்ண மயமான வெள்ளை மாளிகை

இந்நிலையில் ஜோ பிடன் பதவியேற்கவுள்ள வெள்ளை மாளிகை முழுவதும் வண்ணமயமாக அலங்காரங்களுடன் காட்சி அளிக்கிறது. வாஷிங்டன் நகரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள்

நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ள கேப்பிடல் ஹில் பகுதியில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அமெரிக்காவின் பாப் இசைப்பாடகி லேடி காகா அந்த நாட்டின் தேசிய கீதத்தை பாடுகிறார். இன்று இரவு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

திக்கிப் பேசியவர் அதிபராக பதவியேற்கிறார்

திக்கிப் பேசியவர் அதிபராக பதவியேற்கிறார்

அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதில் இப்பதவிக்கு வரும் ஜோ பிடன் தன் வாழ்க்கையில் மிக அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. 1942ஆம் ஆண்டு பிறந்த ஜோ பிடன்தான் அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை. இவர் 4 வயது முதல் திக்கிப் பேசும் குறைபாடுடையவராக இருந்தாலும் அதை சமாளித்து மிக நீண்ட கவிதைகள், கட்டுரைகளை வாசித்து தனது குறையை போக்கினார். அமெரிக்க அதிபராக பிரச்சாரம் செய்த போது ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன் வைத்தார்.

ஆவலுடன் காத்திருக்கும் அமெரிக்க மக்கள்

ஆவலுடன் காத்திருக்கும் அமெரிக்க மக்கள்

அதிபராக பதவியேற்கும் ஜோ பிடன் தனக்கு நேர்ந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர். தன் முன் நின்ற தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக்காட்டியவர்.இப்பெரிய பதவியை அடைந்துள்ளார். வெள்ளை மாளிகையில் பிடன் பதவியேற்கும் போது என்ன பேசுவார் என்பதைக் காணவும் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதைக் கேட்கவும் அமெரிக்க மக்களே ஆவலாக உள்ளனர். அன்று திக்கிப் பேசியவர் இன்று அமெரிக்க அதிபராக மிக நீண்ட உரையாற்றப் போகிறார்.

English summary
Joe Biden was the one who stuttered as a child. Despite facing many trials in his own life, he turned them into achievements and speaks for a very long time as the President of the United States today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X