வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க வரலாற்றிலேயே... வயதான அதிபர்... விசித்திர சாதனையைப் படைக்கும் ஜோ பைடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தனது 78ஆவது வயதில் அதிபராகும் ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றிலேயே வயதான மற்றும் அதிக அனுபவம் வாய்ந்த அதிபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார்.

இத்தேர்தல் 306 எலக்டோரல் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் கடந்த 1993ஆம் ஆண்டிற்குப் பின், 27 ஆண்டுகளில் தேர்தலில் தோற்ற ஒரே அமெரிக்க அதிபர் என்ற மோசமான சாதனையை டிரம்ப் படைத்தார்.

அதிபர்களின் சராசரி வயது

அதிபர்களின் சராசரி வயது

அமெரிக்காவில் அதிபர் பதவி என்பது மிகவும் கடினமான பதவிகளில் முதன்மையானதாகப் பார்க்கப்படுகிறது. பிட்டாகவும் ஆக்டிவாகவும் இருக்கும் நபர்களாலேயே அதிபராகச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது அந்நாட்டு மக்களின் கருத்து. அந்நாட்டின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் தனது 57ஆவது வயதில் பதவி ஏற்றார். அமெரிக்காவில் 50 முதல் 54 வயதுடையவர்களே அதிகம் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து 55-59 வயதுடையவர்கள் அதிகம் அதிபர்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆக்டிவர் அரசியல்வாதி

ஆக்டிவர் அரசியல்வாதி

மக்கள் மனநிலை இவ்வாறு இருப்பதாலேயே அதிபர் வேட்பாளர்கள் பெரும்பாலும் தாங்கள் பிட்டாக இருப்பது போல காண்பித்துக் கொள்வார்கள். கடந்தாண்டு அதிபர் தேர்தலின் போதுகூட டிரம்ப் பிட்டாக இல்லை என்றும் அவரால் அதிபரின் பணிகளைச் செய்ய முடியாது என்றும் பெரியளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிட்டாக இருக்கும் பைடன்

பிட்டாக இருக்கும் பைடன்

மறுபுறம், ஜோ பைடன் 78 வயதானாலும் தான் பிட்டாக இருக்கிறேன் என்பதைக் காட்ட, பிரச்சார கூட்டங்களில் மேடைக்கு ஓடுவது, மக்களுடன் நடைப்பயிற்சி செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டார். இது டிரம்பைவிட ஆக்டிவாகவும் பிட்டாகவும் பைடன் உள்ளார் என்பதை மக்கள் மனதில் பதிவு செய்தது. தேர்தல் முடிவுகளிலும் இவை எதிரொலித்தது.

வயதான அதிபர்

வயதான அதிபர்

இந்நிலையில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக 78 வயதாகும் ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார். இதன் மூலம் அதிபர் பதவியேற்கும் வயதான அதிபர் என்ற விசித்திர சாதனையை அவர் படைக்கிறார். இதற்கு முன்னதாக வயதான அதிபர் என்ற சாதனையை டிரம்ப் படைத்திருந்தார். அவர் தனது 70ஆவது வயதில் அதிபரானார்.

அதிக அனுபவம் கொண்டவர்

அதிக அனுபவம் கொண்டவர்

ஜோ பைடன் வயதான அதிபர் என்றாலும்கூட டிரம்பைப் போல, வேறு தொழிலிலிருந்து திடீரென்று அரசியலில் குதித்தவர் இல்லை. இப்போது இருக்கும் அமெரிக்க அரசியல்வாதிகளிலேயே அதிக அனுபவம் பெற்றவர் என்ற பெருமை அவரிடமே உள்ளது. ஜோ பைடன் தனது 30 வயதில் முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அதன் பின்னர் பல்வேறு முக்கிய பதவிகளிலிருந்து அவர், கடந்த 2008 முதல் 2016 வரை ஒபாமா காலத்தில் துணை அதிபராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

ஜோ பைடனுடன் இணைந்து அமெரிக்காவின் 49ஆவது துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். 200 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராகும் முதல் பெண் என்ற சாதனையையும் அவர் படைக்கவுள்ளார். 56 வயதாகும் கறுப்பினத்தவரான கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

English summary
When Joseph Robinette Biden Jr. takes the oath to become the 46th president of the United States on Wednesday, he will be the oldest person ever sworn in as president.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X