வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தீமையை நன்மை மறுபடி வெல்லட்டும்.." ஜோ பிடன் அசத்தலான நவராத்திரி வாழ்த்து!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், இந்துக்களின் பண்டிகையான, நவராத்திரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீமைக்கு எதிராக நன்மை மீண்டும் ஒரு முறை வெற்றிபெற வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் களமிறங்குகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக இப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

Joe Biden tweets Navratri wish for Hindus

பிடன் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவிக்க ஆதரவு அளித்ததால், இந்திய வம்சாவளி வாக்காளர்கள் அவர் பக்கம் சாய்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக் கணிப்பு கூட இந்த தகவலை உறுதி செய்வதாக அமைந்தது.

Joe Biden tweets Navratri wish for Hindus

இந்த நிலையில், ஜோ பிடன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: "இந்தி பண்டிகையான நவராத்திரி தொடங்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், ஜில் மற்றும் நான் எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். நல்லது மீண்டும் தீமையை வென்றெடுக்கட்டும். மேலும் புதிய தொடக்கங்களையும் அனைவருக்கும் வாய்ப்பையும் அளிக்கட்டும் ". இவ்வாறு ஜோ பிடன் தனது வாழ்த்தில் கூறியுள்ளார்.

ஜோ பிடனின் பிரசாரக்குழுவில் 3வது நபருக்கு கொரோனா.. பிரசாரத்தை ரத்து செய்த கமலா ஹாரிஸ்! ஜோ பிடனின் பிரசாரக்குழுவில் 3வது நபருக்கு கொரோனா.. பிரசாரத்தை ரத்து செய்த கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய புலம்பெயர்ந்த நாட்டினர் என்றால் அது இந்தியர்கள்தான். வாக்காளர்களில் 1 சதவீதம் அளவுக்கு உள்ளனர்.

English summary
As the Hindu festival of Navratri begins, Jill and I send our best wishes to all those celebrating in the U.S. and around the world. May good once again triumph over evil — and usher in new beginnings and opportunity for all, says Joe Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X