வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டால்.. ரஷ்யா, சீனாவுக்கு ஜோ பிடென் கடும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் தலையிட்டால் ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    China, Russia-வை எச்சரிக்கும் Joe Biden | US Election 2020 | Oneindia Tamil

    கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இதில் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் அதிபராக அமெரிக்காவின் போட்டி நாடான ரஷ்யா உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    நேர்மையான ஆராய்ச்சி.. 2 வல்லரசுகளின் வேக்சின் கனவை கலைக்கும் ஆக்ஸ்போர்ட்.. அதிர்ச்சியில் ரஷ்யா, சீனாநேர்மையான ஆராய்ச்சி.. 2 வல்லரசுகளின் வேக்சின் கனவை கலைக்கும் ஆக்ஸ்போர்ட்.. அதிர்ச்சியில் ரஷ்யா, சீனா

    அதிபர் வேட்பாளர்

    அதிபர் வேட்பாளர்

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் மீண்டும் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக ஜோ பிடென்(77) போட்டியிடுகிறார்.

    தேர்தலில் தலையீடு

    தேர்தலில் தலையீடு

    ஜோ பிடென் நிதி திரட்டல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2016ம் ஆண்டில் நடந்த அதே சம்பவம் மீண்டும் அரங்கேறுகிறது. இம்முறை ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பிற அந்நிய நாடுகள் நமது ஜனநாயகத்திலும் நமது தேர்தல் நடைமுறைகளிலும் தலையிட தயாராகி வருகின்றன. இது தொடர்பாக நம்பத்தகுந்த உளவுத் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

    அனுமதிக்க முடியாது

    அனுமதிக்க முடியாது

    அந்நியர்களை தேர்தலில் தலையிட ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எந்த நாடு தேர்தலில் தலையிட விரும்புகிறது என்பதை உலகிற்கு அறிவிப்பது தான் அவர்கள் தேர்தலில் தலையிட விடாமல் தடுப்பதற்கான சிறந்த வழி. ஆனால் இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டது.

    பெரும் விலை கொடுக்கணும்

    பெரும் விலை கொடுக்கணும்

    நான் அதிபரானால் நமது தேர்தல் நடைமுறையில் தலையிடும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.எனது முழு அதிகாரத்தை பயன்படுத்தி பொருளாதார தடைகளை அந்த நாடுகள் மீது விதிப்பேன். தேர்தலில் தலையிட்ட நாடுகள் அதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும்" இவ்வாறு கூறினார். முன்னதாக டிரம்பும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜோ பிடென் வெற்றி பெற சீனா உதவுவதாகவும், ரஷ்யாவின் தலையீடு இல்லை என்றும் கூறினார்.

    English summary
    Democratic presidential nominee Joe Biden has warned that Russia, China, Iran and some other foreign players are working to interfere in the US presidential elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X