வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசத்திட்டாரே.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த ஜோ பிடன்.. கமலா ஹாரீஷும் வாழ்த்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோ பிடன்.

Recommended Video

    டிரம்பும் பிடெனும் இந்தியர்களை கவர நினைப்பது ஏன்?

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஜோ பிடன். அதே கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆபிரிக்க அமெரிக்கர் ஆவார்.

    இந்த நிலையில்தான் கமலா ஹாரிஸை விடவும் தனக்கு இந்தியர்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான, டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் மும்பைக்கும் என்ன தொடர்பு... வருத்தப்பட்ட ஜோ!!அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் மும்பைக்கும் என்ன தொடர்பு... வருத்தப்பட்ட ஜோ!!

    இந்தியர்கள் ஆதரவு

    இந்தியர்கள் ஆதரவு

    அமெரிக்காவில் கணிசமாக வசிக்கும் இந்தியர்கள் ஆதரவு தொடர்பாக இரு தரப்பும் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஜோ பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஜோ பிடன் வாழ்த்து

    ஜோ பிடன் வாழ்த்து

    இதுபற்றி அவர் கூறுகையில், அமெரிக்கா மற்றும் இந்தியா மற்றும் உலகம் முழுக்க உள்ள நாடுகளில் இந்துப் பண்டிகையான கணேஷ் சதுர்த்தியை கொண்டாடி வரும் அனைவரும், தடைகளில் இருந்து மீண்டு வரவும், ஞானம் பெறுவதற்கும், புதிய தொடக்கத்துக்கான பாதையை கண்டறிவதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

    கமலா ஹாரீஷ்

    கமலா ஹாரீஷ்

    இதேபோன்று கமலா ஹாரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பிடன் ட்வீட் செய்துள்ளதை ரீட்வீட் செய்துள்ளதோடு, நானும், ஜோபிடனுடன் சேர்ந்து, இனிய மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி

    நாடு முழுக்க சனிக்கிழமையான, இன்று, விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலான இடங்களில் பொது இடங்களில் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற போதிலும், வழக்கமான உற்சாகத்துடன் வீடுகளுக்குள் விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    To everyone celebrating the Hindu festival of Ganesh Chaturthi in the U.S., India, and around the world, may you overcome all obstacles, be blessed with wisdom, and find a path toward new beginnings, Joe Biden wishes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X