வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ப்ரே அடித்தால் போதும்.. தற்கொலை எண்ணம் ஓடிவிடும்.. அமெரிக்காவில் அறிமுகமான ஜான்சன்&ஜான்சன் மருந்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மனச் சோர்வு காரணமாக தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு ஸ்ப்ரவேட்டோ என்ற, ஸ்ப்ரே ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் மக்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க மனச்சோர்வு நோயாளிகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மனச்சோர்வு ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணத்திற்கு கொண்டு சென்று விட்டு விடும் என்பதால் அதை தடுப்பதற்கான ஆய்வுகளில் மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான் அரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்

ஸ்ப்ரே போதும்

ஸ்ப்ரே போதும்

அதன் ஒரு பகுதியாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் அமெரிக்க நரம்பியல் அறிவியல் மருத்துவ விவகாரத்துறை பிரிவின் துணைத் தலைவர் மைக்கேல் கிராமர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்பிரே அடித்துக் கொண்டால் தற்கொலை எண்ணம் போய்விடும். இது போன்ற ஒரு ஸ்ப்ரே தங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிலவரம்

அமெரிக்க நிலவரம்

அமெரிக்காவில் சுமார் 12 சதவீதம் மக்கள் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஸ்பிரே அவசர தேவைகளுக்கு உபயோகிக்கப்படலாம். இதன் பிறகு மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வரலாம்.

6000 பேரிடம் பரிசோதனை

6000 பேரிடம் பரிசோதனை

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஸ்பிரே கொடுத்து பரிசோதிக்கப்பட்டு உள்ளது. அதில் நல்ல பலன் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. வழக்கமாக மனச்சோர்வை குறைப்பதற்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் சுமார் ஒரு வார காலத்துக்குப் பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஸ்ப்ரே உடனடியாக வேலையை தொடங்குகிறது என்பதுதான் சிறப்பம்சம் ஆகும்.

பாசிட்டிவ் எண்ணம்

பாசிட்டிவ் எண்ணம்

எண்ணங்கள், மனநிலை போன்றவற்றில் மிக விரைவாக மாற்றத்தை ஏற்படுத்தி, பாசிட்டிவ் எண்ணங்களுக்கு திருப்பி விடுவதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஸ்ப்ரே நல்ல வகையில் பலன் கொடுக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பே அமெரிக்காவில் தற்கொலை பிரச்சினை என்பது மிக அதிகமாக இருந்தது. மனச்சோர்வு பாதிப்பு உள்ளவர்கள் சுமார் 30% பேர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் அந்த நாட்டில்.

பரிந்துரை

பரிந்துரை

அமெரிக்காவில், 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதில், மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்க கூடிய மருந்தாக இந்த ஸ்பிரே உள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலை விகிதத்தை வேகமாக குறைப்பதற்கு இந்த மருந்து உதவும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட, குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இதை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Johnson & Johnson's Spravato has been approved as the first antidepressant for actively suicidal people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X