வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தேங்க்ஸ் குரங்கு".. களமிறங்கியது இன்னொரு வேக்சின்.. கலக்க காத்திருக்கும் ஜான்சன் அன்ட் ஜான்சன்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து குரங்கிற்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில், ஒரே டோஸில் குரங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து, நுரையீரல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மாடெர்னா, கொரோனா தடுப்பு மருந்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்துடன் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட ஆய்வில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து மேலும் ஒரு தடுப்பு மருந்து நம்பிக்கை அளித்துள்ளது.

பெரியவர்களை விட குழந்தைகளிடம் 10 முதல் 100 மடங்கு வைரஸ் லோடு.. கொரோனா ஆய்வில் புதிய திருப்பம்பெரியவர்களை விட குழந்தைகளிடம் 10 முதல் 100 மடங்கு வைரஸ் லோடு.. கொரோனா ஆய்வில் புதிய திருப்பம்

மூக்கில் ஸ்வாப்

மூக்கில் ஸ்வாப்

ஜான்சன் அண்ட் ஜான்சனின் அறிக்கை மருத்துவ இதழில் வெளியாகி இருக்கிறது. அதில். ஆறு குரங்குகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் இந்த குரங்குகளின் நுரையீரல் நல்ல முறையில் செயல்பட்டுள்ளது. மேலும் ஆறு குரங்குகளின் மூக்கில் ஸ்வாப் மூலம் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவற்றுக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அவற்றில் ஐந்து குரங்குகள் கொரோனா நோயில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

மனிதருக்கு நம்பிக்கை

மனிதருக்கு நம்பிக்கை

இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தலைமை அறிவியல் அதிகாரி மருத்துவர் பால் ஸ்டோபில்ஸ் ராய்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''ஒரு டோஸ் கொடுக்கப்பட்டு, அதனால், கொரோனா கால கட்டத்தில் பலன் கிடைக்கிறதா என்ற ஆய்வுக்கு நல்ல நம்பிக்கை பிறந்துள்ளது. மனிதருக்கும் பலன் கிடைக்குமா என்பதற்கு நல்ல முடிவு கிடைத்து இருக்கிறது. இதுமாதிரியான வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் முந்தைய ஆய்வில் இரண்டாவது டோஸில் நல்ல பலன் அளித்தன. ஆனால், தற்போது கொரோனா தொற்று அதிகரித்து இருக்கும் நிலையில் சிங்கிள் டோஸ் நல்ல பலன் அளித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முன்னோடி

அமெரிக்கா முன்னோடி

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்க அரசு 456 மில்லியன் டாலர் அளித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 6.60 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

இரண்டு டோஸ்

இரண்டு டோஸ்

செப்டம்பர் மாதத்தின் இறுதியில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த இருப்பதாகவும், அப்போது பலர் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு சிங்கிள் டோஸ் மட்டும் கொடுக்க இருப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. அதே சமயம் மறுபக்கம், சிலருக்கு இரண்டு டோஸ் கொடுத்தும் ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

செல்லுக்கு புரோட்டீன்

செல்லுக்கு புரோட்டீன்

மனித உடலில் இருக்கும் செல்லுக்கு கொரோனா வைரஸ் புரோட்டீன் எடுத்து செல்ல சாதாரண சளிக்கு பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தான adnovirus type 26 or Ad26 ஆகியவைதான் பயன்படுத்தப்படுகிறது என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது.

மூக்கில் கொரோனா வைரஸ்

மூக்கில் கொரோனா வைரஸ்

குரங்குகளுக்கான ஆய்வுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஹார்வார்டு இரண்டும் 32 விலங்குகளுக்கு வெவ்வேறான தடுப்பு மருந்துகளை செலுத்தின. 20 விலங்குகளுக்கு வெறும் தண்ணீர் மட்டும் செலுத்தப்பட்டது. ஆறு வாரங்கள் கழித்து இந்த விலங்குகளை சோதித்துப் பார்த்ததில், தண்ணீர் செலுத்தப்பட்ட அனைத்து 20 விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. அவற்றின் நுரையீரல் மற்றும் மூக்கில் கொரோனா வைரஸ் கிருமிகள் இருந்துள்ளன.

குரங்குகளிடம் நல்ல பலன் கிடைத்து இருப்பதால், மனிதர்களுக்கு செலுத்த ஜான்சன் அண்ட் ஜான்சன் முடிவு செய்துள்ளது.

English summary
Johnson & Johnson tested Covid-19 Vaccine in Monkeys received good result
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X