வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன சொல்றீங்க! குட்டி நிலவை பெற்றெடுக்கப் போகும் தொலைதூர கிரகம்! நாமும் கூட பார்க்கலாமாம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமி உட்பட கிரகங்களின் தோற்றங்கள் குறித்துக் கண்டறிவதில் ஆய்வாளர்களுக்கு முக்கிய திருப்பம் நடந்துள்ளது.

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது. பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் கிரகங்களின் படங்களை ஜேம்ஸ் வெப் அனுப்பி வருகிறது.

இது பூமியின் தோற்றம் குறித்தும் பூமி எப்படி நாம் இப்போது இருக்கும் நிலையை அடைந்தது என்பது குறித்தும் தெரிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுள்ளென்று வெயில்..5 நாட்களுக்கு ஜில்லென்ற மழைக்கு வாய்ப்பு - வானிலையின் கூல் அறிவிப்பு சுள்ளென்று வெயில்..5 நாட்களுக்கு ஜில்லென்ற மழைக்கு வாய்ப்பு - வானிலையின் கூல் அறிவிப்பு

ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள்

இந்நிலையில், ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ள புதிய கிரகம் அதன் சிறு வயதில் உள்ளது. அதாவது அந்த புதிய கிரகம் தோன்றி சில காலம் மட்டுமே ஆகிறது. இது கிரகத்தின் தோற்றம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவும் என நம்பப்படுகிறது. அந்த கிரகத்தில் இருந்து நிலாக்களைப் போல சில நட்சத்திரங்கள் பிரியும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கிரகம்

கிரகம்

மிக விரைவில் இது நடக்கும் என்றும் இதை நம்மால் பார்க்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த கிரகம் AS 209 என்ற அதன் முக்கி நட்சத்திரத்தில் இருந்து 18.59 பில்லியன் மைல் தொலைவில் அமைந்துள்ளது, இது பூமியிலிருந்து 395 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இப்போது ஆய்வு செய்யப்பட்டு வரும் கிரகம் அதன் நட்சத்திரத்தில் இருந்து சமீபத்தில் தான் பிரிந்து வந்துள்ளது.

பிரியும்

பிரியும்

கிரகத்தின் தோற்றம் குறித்துத் தெரிந்து கொள்ள இதை விடச் சிறப்பான சூழல் அமையாது என்றே ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், அந்த கிரகத்தைச் சுற்றி வாயுக்களும் உள்ளன. அதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அதில் இருந்து நிலவுகளைப் போன்ற நட்சத்திரங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. இந்த வியாழன் கிரகம் அளவுக்குப் பெரிதாக உள்ளது. வரும் காலத்தில் இதில் இருந்து புதிய நிலவைப் போன்ற கிரகம் பிரியவும் வாய்ப்பு உள்ளது.

 பிக் பேங்

பிக் பேங்

வரும் காலத்தில் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் மீது கவனம் செலுத்த ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் பிக் பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலமே நிகழ்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து பல கோடி ஆண்டுகள் பூமி மெல்ல மாற்றமடைந்து நாம் இப்போது இருக்கும் சூழலை அடைந்துள்ளது. எனவே, கிரகங்கள் எப்படி உருவானது என்று காலத்தைப் பின்னோக்கி சென்று காண்பது எல்லாம் நடக்காது விஷயம்

 உதவும்

உதவும்

இந்தச் சூழலில் தான் இப்போது புதிதாக உருவான இந்த நட்சத்திரம் நமக்குக் கிடைத்துள்ளது. இது நமது சூரியக் குடும்பம் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய உதவும் என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர், வரும் காலத்தில் அங்கே என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கிறது என்பதைக் கவனித்து, இங்கே இருக்கும் சூழலை ஆராயும்போது பூமியின் பரிமாண வளர்ச்சியை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

English summary
All things to know about solar system formation: (பூமியின் பரிமாண வளர்ச்சியை கண்டறிய உதவும் புதிய கிரகம்) How owr solar sytem formed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X