வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Kamala Harris and Mike Pence Debate: அனல் பறக்குமா... இன்று காலை நேருக்கு நேர் விவாதம்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் சால்ட் லேக்கில் இருக்கும் உட்டா பல்கலைக் கழகத்தில் இந்திய நேரப்படி, வியாழக் கிழமை (அக்டோபர் 8ஆம் தேதி) காலை 6.30 மணிக்கு அந்த நாட்டின் துணை அதிபருக்கான போட்டி வேட்பாளர்கள் மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் விவாதத்தில் பங்கேற்கின்றனர். இந்த விவாதம் சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

விவாதத்தை வாஷிங்டன் தலைமை செய்தியாளர் சுசன் பேஜ் நடத்துகிறார். இந்த விவாதத்தை அமெரிக்காவின் பெரும்பாலான டிவிக்கள் ஒளிபரப்ப தயாராகி வருகின்றன. எந்த இடைவெளியும், விளம்பரங்களும் இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குணமாகி வெள்ளை மாளிகை திரும்பிய ட்ரம்ப் - மாஸ்க் அகற்றியதால் மருத்துவர்கள் எச்சரிக்கை கொரோனா குணமாகி வெள்ளை மாளிகை திரும்பிய ட்ரம்ப் - மாஸ்க் அகற்றியதால் மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா

கொரோனா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைப் போல் அவரது குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபருக்கு போட்டியிடும் மைக் பென்ஸ் வெள்ளை மாளிகையில் கொரோனா தொற்று இருப்பவர்களுடன் சந்தித்து இருக்கிறார். இவருக்கு கொரோனா இல்லை என்றாலும், பாதுகாப்பாக ''ப்ளக்சி கிளாஸ் ஸ்க்ரீன்'' பின்புறம் நின்று விவாதிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

ட்ரம்ப்

ட்ரம்ப்

இவர் நேருக்கு நேர் ஜனநாயக் கட்சி சார்பில் துணை அதிபருக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸை எதிர்கொள்கிறார். சமீபத்தில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூன்றே நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார் என்ற செய்தியை அனைவரும் பார்த்தோம். ஆனால், ''கொரோனா அவ்வளவு மோசமானது இல்லை. அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். தங்களது இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டும்'' என்று ட்ரம்ப் கூறிஇருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால், அமெரிக்காவில் இதுவரைக்கும் கொரோனாவுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க மக்கள் தேர்தல் சமயத்தில் அச்சம் அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அமெரிக்காவில் கொரோனாவை குணமாக்கும் மருந்து இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ளும் வகையில் ட்ரம்ப் நடவடிக்கை இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

வாக்கு

வாக்கு

கொரோனா எப்படி மூன்றே நாட்களில் குணமடையும் என்ற கேள்வியும் எழுந்து இருந்தது. தேர்தல் சமயத்தில் மக்களின் கோபத்தில் இருந்து வெளியே வரவேண்டும், வாக்குகளை பெற வேண்டும் என்று ட்ரம்ப் இவ்வாறு நடந்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மறுப்பாரா

மறுப்பாரா

இத்துடன் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திருபும்போது, மாஸ்க் அணிந்து கொள்ளாமல், தனது பாதுகாவலர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கண்டிப்பாக இதுதொடர்பான கேள்வியை விவாதத்தில் கமலா ஹாரிஸ் எழுப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போது ட்ரம்ப் வாதத்தை பென்ஸ் ஏற்பாரா? மறுப்பாரா? என்பதும் தெரிய வரும்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

கொரோனாவுக்குப் பின்னர் அந்த நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு இழப்பு, கொரோனா உயிரிழப்பு என்று பல்வேறு பிரச்சனைகள் குறித்து கமலா ஹாரிஸ் கேள்வி எழுப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா

இந்தியா

சமீபத்தில் அதிபர் வேட்பாளர்களான டொனால் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர். அப்போது இருவரும் இந்தியாவை எந்த வகையிலும் புகழ்ந்து பேசவில்லை. மாறாக இந்தியாவை ட்ரம்ப் சாடினார். கொரோனா உயிரிழப்பு குறித்து உண்மையான எண்ணிக்கையை இந்தியா, சீனா, ரஷ்யா வெளியிடுவதில்லை என்றார். இத்துடன் இந்த மூன்று நாடுகளும்தான் மாசு ஏற்படுவதற்கு காரணம் என்று தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamala Harris and Mike Pence Debate: what can we expect
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X