வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2020-ஐ கலக்கிய புரிந்த கமலா ஹாரீஸ்.. இந்தியாவுக்கு பெருமை.. அமெரிக்காவில் புதுமை #Newsmakers2020

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் துணை அதிபராக கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் 2020-இன் தலைப்பு செய்திகளிலும் இடம் பெற்றார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கலிபோர்னியா மாகாணத்தின் செனட் உறுப்பினரான கமலா ஹாரீஸ், அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து சில நாட்கள் கழித்து தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல தம்மிடம் போதிய நிதி இல்லை என கூறி போட்டியிட போவதில்லை என அறிவித்தார். இதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை!ஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை!

அதிபர் தேர்வு

அதிபர் தேர்வு

இதையடுத்து ஜோ பிடனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார் கமலா. இந்த நிலையில் தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் கமலா ஹாரீஸ்தான் துணை அதிபர் என அறிவித்தார். இது அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கும் கருப்பின மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கருப்பர் இனம்

கருப்பர் இனம்

அன்று முதல் கமலா ஹாரீஸ் லைம் லைட்டுக்கு வந்துவிட்டார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தாயார் சியாமளா கோபாலன் தமிழகத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்த கருப்பினத்தவர். இதனால் கமலா ஹாரீஸும் கருப்பர் இனத்தை சேர்ந்தவராகவே கருதப்படுகிறார்.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

இந்த நிலையில் அதிபர்களுக்கிடையேயான விவாதங்களிலும் தேர்தல் பிரசாரங்களிலும் டொனால்ட் டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இனவாதத்திற்கு ஆதரவானவர், இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்தது, கொரோனாவை தடுக்க தவறியது, சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியும் பொருளாதாரத்திற்காக லாக்டவுனை அறிவிக்காமல் லட்சகக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்க காரணமானவர் என பல்வேறு குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது முன் வைக்கப்பட்டன.

வெள்ளையின மக்கள்

வெள்ளையின மக்கள்

இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளையின மக்கள், கருப்பின மக்கள் என பெரும்பாலானோர் ஜோ பிடனுக்கு வாக்களித்தனர். இதனால் ஜோ பிடன் வெற்றி பெற்றார். கூடவே கமலா ஹாரீஸும் துணை அதிபரானார். இதன் மூலம் அமெரிக்காவில் துணை அதிபராகியுள்ள கருப்பர் இனத்தை சேர்ந்த முதல் பெண் என்றும் அப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற பெருமையையும் அவர் ஒருசேர பெற்றுள்ளார். அத்துடன் தமிழகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

English summary
News Maker 2020: Kamala Harris become in the lime light after she was announced as Vice President candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X