வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிஸ் செய்கிறோம்.. டிரம்பின் நக்கல் ட்வீட்டுக்கு நறுக்கென கிண்டலாக பதில் அளித்த கமலா ஹாரிஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் விலகல் குறித்து நக்கல் ட்வீட் போட்ட அதிபர் டிரம்புக்கு கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார் கமலா.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ரிப்பப்ளிக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பாக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், முன்னாள் துணை அதிபர் ஜோபிடன் உள்பட 3 பேர் போட்டியிட இருந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். தான் கோடீஸ்வரி அல்ல என்றும் தன்னால் தேர்தல் பிரசாரத்துக்கு செலவு செய்ய முடியாது என்றும் பணம் இல்லாமல் நிறைய பிரச்சினைகள் வருகிறது என்று கூறி விலகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிலிருந்து விலகினார் சென்னை பெண் கமலா ஹாரிஸ்.. ஷாக்கிங் காரணம்! அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிலிருந்து விலகினார் சென்னை பெண் கமலா ஹாரிஸ்.. ஷாக்கிங் காரணம்!

கிண்டல் ட்வீட்

இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் அதிபர் போட்டியிலிருந்து கமலா விலகியது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் என கிண்டலாக ட்வீட் போட்டுள்ளார்.

கமலா பதிலடி

இதற்கு கமலா ஹாரிஸும் வழக்கம் போல் பதிலடி கொடுத்துள்ளார். இவரது ட்வீட்டில் கமலா கூறுகையில் கவலைப்படாதீர்கள் அதிபரே.. வழக்கு விசாரணையில் சந்திப்போம் என கூறியுள்ளார். அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக டிரம்ப் வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்.

கமலா பிரசாரம்

கமலா பிரசாரம்

உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் கமலா பிரசாரத்துக்காக நன்கொடை வழங்கி வந்தனர். இந்த நிலையில் நிதி இல்லாததால் போட்டியிலிருந்து விலகிய கமலா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க தினமும் போராடுவேன் என கூறியுள்ளார்.

வரிவிதிப்பு கொள்கை

வரிவிதிப்பு கொள்கை

ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் அதிபர் டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். டிரம்பின் குடியுரிமை கொள்கை, மெக்சிகோ சுவர், வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுத்து வந்தவர்.

English summary
Kamala Harris gives suitable reply to American President Donald Trump when he teases her drop out of Presidential race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X