வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலா ஹாரிஸ் ரொம்ப மோசம்.. ஜோ பிடனை விட மோசம்.. டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ரொம்ப மோசம் என்று விமர்சனம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

Recommended Video

    America presidential Election | திடீரென பிரபலமடையும் தமிழக கிராமம்

    அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் மறுபடியும் அந்த கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார்.

    எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் களமிறங்கியுள்ளார்.

    அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது.. ஏன் சொல்றீங்க.. ரஷ்ய கொரோனா தடுப்பூசி பற்றி கிரண் மஜும்தார் பொளேர் அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது.. ஏன் சொல்றீங்க.. ரஷ்ய கொரோனா தடுப்பூசி பற்றி கிரண் மஜும்தார் பொளேர்

    துணை அதிபராக கமலா ஹாரிஸ்

    துணை அதிபராக கமலா ஹாரிஸ்

    இந்த நிலையில்தான், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவரும், கலிபோர்னியா செனட்டருமான, கமலா ஹாரிஸை, துணை அதிபராக நியமிக்க உள்ளதாக ஜோ பிடன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் கணிசமாக வசிக்கக்கூடிய இந்தியர்களின் வாக்குகள் ஜனநாயக கட்சிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    ட்ரம்ப் பேட்டி

    ட்ரம்ப் பேட்டி

    இந்த நிலையில்தான் கமலா ஹாரிஸை விடவும் அதிகமான இந்தியர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப் இது பற்றி கூறியதை நீங்களே பாருங்கள்.

    கமலா ஹாரிஸ் மோசம்

    கமலா ஹாரிஸ் மோசம்

    ஜோ பிடன் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் காவல்துறையின் ஒவ்வொரு பிரிவையும் வலுவிழக்க வைக்கும் சட்டத்தை அவர் இயற்றி விடுவார். கமலா ஹாரிஸ் அதைவிடவும் மோசம். அவர் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவருக்கு இருக்கும் இந்தியர்கள் ஆதரவைவிட எனக்கு இந்தியர்களின் ஆதரவு அதிகம் உங்களது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    கமலா ஹாரிஸ் விவாத நிகழ்ச்சிகளை பார்க்க நேர்ந்தது. என்னைவிடவும் ஜோ பிடனை அவர்தான் கிண்டல் செய்வதை போல இருக்கிறது. ரொம்ப போர் அடிக்கும் வகையிலும் உள்ளது. ஜோ பிடன் அதிபரானால் உங்களது மரியாதையை நீக்கி விடுவார். அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இவ்வாறு டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    வெள்ளையர்

    வெள்ளையர்

    அதேநேரம், கமலா ஹாரிஸ் வெள்ளையர் அல்லாதவர் என்பதால் வேறுபாடு காட்டுகிறார்களா என்ற நிருபரின் கேள்விக்கு, இல்லை என்று பதிலளித்தார் ட்ரம்ப். முன்னதாக காவல் துறைக்கு வழங்கப்படும் நிதி உதவியை ஜோ பிடன் நிறுத்தி விடுவார் என்று ட்ரம்ப் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    US President Donald Trump on Friday attacked Democratic presidential nominee Joe Biden and his running mate Kamala Harris, saying "no one will be safe in Biden's America" adding that the California Senator is a "step worse".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X